Twitter : தூக்கி எரியப்பட்ட ஊழியர்கள்; எலான் மஸ்க் மீது வழக்கு - என்ன நடக்கிறது? Twitter
பிசினஸ்

Twitter : தூக்கி எறியப்பட்ட ஊழியர்கள்; எலான் மஸ்க் மீது வழக்கு - என்ன நடக்கிறது?

Antony Ajay R

ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைவரான எலான் மஸ்க் எதிர்பார்த்தபடியே இன்று ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளார்.

இதில் இந்திய ஊழியர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. குறிப்பாக விற்பனை, மார்கெட்டிங், பார்ட்னர் ரிலேஷன்ஸ், உள்ளடக்கம் சரிபார்த்தல் மற்றும் எடிடோரியல் பிரிவுகளில் பணியாற்றியவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக ட்விட்டர் நிறுவனத்தை மறு சீரமைப்பு செய்வதன் பகுதியாக ஊழியர்களுக்கு பணி நீக்கத்துக்கான ஈமெயில்கள் அனுப்பப்பட்டுள்ளது.

பணி நீக்கம் குறித்து ட்விட்டர் அதிகாரப்பூர்வ கணக்கில், "Bye Literally Every One" என ட்வீட் செய்யப்பட்டு பின்னர் அழிக்கப்பட்டது.

இந்திய ஊழியர்கள் தாங்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது குறித்து ட்விட்டரில் வெளிப்படையாக பேசி வருகின்றனர். யாஷ் அகர்வால் என்ற 23 வயது இளைஞரின் ட்வீட் வைரலாக பரவி வருகிறது.

ட்விட்டரில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட அனைவரும் #OneTeam என்ற ஹேஷ்டேகில் தங்கள் உணர்வுகளை பதிவிட்டு வருகின்றனர்.

ட்விட்டரின் தொடர்புத்துறை தலைவரான பல்லவி எலான் மஸ்கை கேலி செய்து பதிவிட்டுள்ளார்,

ட்விட்டரின் வாடிக்கையாளர் கணக்கு மேளாலராக இருந்த ஷிஃபாலிகா யோகியின் பதிவு,

ட்விட்டர் ஊழியர்களுக்கு 3 வகையான ஈமெயில்களை அனுப்பி வருகிறது. வேலையில் இருப்பவர்கள், வேலையில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மற்றும் இதுவரை முடிவு செய்யப்படாதவர்கள்.

எலான் மஸ்க் மொத்தமாக எத்தனை பேரை வேலையில் இருந்து நீக்கியுள்ளார் என்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. குறைந்தது 3000 பேராவது இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இந்த பணி நீக்கத்தின் மூலமாக ஆண்டுக்கு 1 பில்லியன் டாலர் வரை ட்விட்டர் மிச்சப்படுத்தலாம் எனவும் தகவல்கள் கூறுகின்றனர்.

எலான் மஸ்குக்கு எதிராக நீதிமன்ற வழக்கு

பணியாளர்களை 6 மாதம் முன்னறிவிப்பு கொடுக்காமல் மஸ்க் வேலை நீக்கம் செய்வது சட்டத்துக்கு புறம்பானது என்று பணியாளர்கள் சான் பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளனர்.

மேலும் இந்த பணி நீக்கம் மனிதநேயமற்ற ஒன்றாக இருக்கிறது எனவும் பலர் கூறுகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?