<div class="paragraphs"><p>Mark Zuckerberg</p></div>

Mark Zuckerberg

 

Facebook

பிசினஸ்

பில் கேட்ஸ், மார்க் ஜூகர்பெர்க் சொத்துகள் இரண்டு மடங்கு அதிகரிப்பு - விரிவான தகவல்கள்

Antony Ajay R

சில நாட்களுக்கு முன் நடிகர் விஜய் ஆன்டணி இப்படி ஒரு பதிவை ட்விட்டரில் வெளியிட்டார், “கொரோனா பணக்காரனைப் பெரிய பணக்காரனாகவும், எழையை பிச்சைக்காரனாகவும் மாற்றும். எவனாவது ஹிரோஷிமா நாகசாகில போட்ட மாதிரி, உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிசுட்டா நல்லா இருக்கும். வாழ்க வளமுடன்” அது வெறும் விரக்தியான ட்விட்டர் பதிவு அல்ல அது தான் நிஜம். ஆக்ஸ்பாம் ஆய்வுகளின் அதிர்ச்சியளிக்கக் கூடிய முடிவுகளும் அதைத்தான் கூறுகின்றன.

ஸ்காட்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மாநாடு நேற்று தொடங்கிய நிலையில் சமத்துவமற்ற சமூகம் குறித்த அறிக்கையை ஆக்ஸ்ஃபாம் வெளியிட்டுள்ளது.

பணக்காரர்

உலகின் முதல் 10 கோடீஸ்வரர்களின் சொத்து பெருந்தொற்றுக் காலத்தில் இரு மடங்காகியுள்ளது. 99 சதவீத மக்களின் வருமானம் குறைந்துள்ளது என்று ஆக்ஸ்ஃபாம் ஆய்வில் தெரியவந்துள்ளது.

''கொரோனா பெருந்தொற்றால் உலகில் உள்ள முதல் 10 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால், 99 சதவீத மக்களின் வருமானம் குறைந்திருக்கிறது.

பெருந்தொற்று தொடங்கும்போது 10 கோடீஸ்வரர்களின் சொத்து 70,000 கோடி டாலராக இருந்தது. தற்போது 1.50 லட்சம் கோடி டாலராக அதிகரித்துள்ளது. ஒரு வினாடிக்கு 15 ஆயிரம் டாலர் வீதமும், நாள் ஒன்றுக்கு 1300 கோடி டாலர் வீதமும் அதிகரித்து இந்த நிலையை அடைந்துள்ளது. இந்த 10 கோடீஸ்வரர்களும் தங்களின் 99.99 சதவீத சொத்துகளை நாளையே இழந்தால்கூட, மீதமிருக்கும் அவர்களின் சொத்து, உலகில் உள்ள 99 சதவீத மக்களின் சொத்து மதிப்பை விட அதிகமாக இருக்கும். உலகில் உள்ள 310 கோடி ஏழை மக்களின் சொத்துகளைவிட 6 மடங்கு இந்த 10 கோடீஸ்வரர்களிடம் இருக்கிறது.

உலக பணக்காரர்கள்

கடந்த 14 ஆண்டுகளில் அதிகரித்ததை விட வேகமாக இவர்களின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. யாரெல்லாம் இந்த 10 பணக்காரர்கள் என்ற கேள்வி எல்லாருள்ளும் எழும். 2021, நவம்பர் 3-ம் தேதி, ஃபோர்ப்ஸ் கணக்கின்படி, உலக கோடீஸ்வரர்களில் முதல் 10 இடங்களில் எலான் மக்ஸ், ஜெப் பிஜோஸ், பெர்நார்ட் அர்னால்ட் குடும்பத்தார், பில் கேட்ஸ், லாரி எலிஸன், லாரி பேஜ், செர்ஜி பிரின், மார்க் ஜூகர்பெர்க், ஸ்டீவ் பால்மெர், வாரன் பஃபெட் ஆகியோர் உள்ளனர்.

இப்படி சமூகம் சமநிலையில் இல்லாமல் குறிப்பிட்ட நபர்களின் சொத்து மதிப்பு தொடர்ந்து அதிகரிப்பது, சமநிலையற்ற சமூகத்தை உருவாக்கி கீழ் மட்டத்தில் இருக்கும் மனிதர்களை வெகுவாக பாதிக்கும். உலக அளவில் மட்டுமில்லாமல் இந்திய அளவிலும் இந்த நிலை தொடர்கிறது.

இந்திய பொருளாதாரம்

இந்தியாவில் உள்ள முதல் 10 இடங்களில் உள்ள கோடீஸ்வர்களின் சொத்தால், நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையின் பள்ளிக் கல்வி, உயர்கல்விக்குச் செலவுக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்குப் போதுமானது என்று ஆக்ஸ்ஃபாம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 39 சதவீதம் அதிகரித்து 142 ஆக அதிகரித்துள்ளது, பலரின் சொத்து இரு மடங்காக உயர்ந்துள்ளது. இந்த கோடீஸ்வரர்களுக்கு 1% கூடுதல் வரி விதித்தால் நாட்டில் பெருந்தொற்று காலத்தில் கூடுதலாக 17.7 லட்சம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்கியிருக்க முடியும்.

முதல் 10 இடங்களில் உள்ள கோடீஸ்வர்ரகள் ஒவ்வொருவரும் நாள்தோறும் 10 லட்சம் டாலர் அதாவது ரூ7.41கோடி செலவு செய்தாலும் அவர்களின் சொத்துக்களை முழுவதும் செலவழித்து முடிக்க 84 ஆண்டுகள் ஆகும். ஆம், இந்தியாவில் உள்ள 10 சதவீத கோடீஸ்வரர்களிடம்தான் நாட்டின் 45 சதவீத சொத்துக்கள் இருக்கின்றன, மற்ற 50 சதவீத மக்களிடம் வெறும்6 சதவீதம் சொத்துக்களே உள்ளன.

Inequal economy

இந்தியாவில் ஓரளவு சமத்துவமான சமூகத்தை நிறுவ, கல்வி, சுகாதாரம், சமூகப்பாதுகாப்புக்கு அதிகமான அரசு நிதியைத் திருப்பிவிட வேண்டும். அப்போதுதான் சமூகத்தில் சமத்துவமின்மையைக் குறைக்க முடியும், இந்த துறைகளை தனியார்மயமாக்குவதையும் தவிர்க்க வேண்டும் என்று இந்திய அரசு வலியுறுத்தப்பட்டுள்ளது .


மேலும் கோடீஸ்வரர்களிடம் கூடுதல் வரி விதித்து அதனை ஏழைகளுக்குச் செலவழிக்க வேண்டும் என்றும் ஆக்ஸ்பான் கூறியுள்ளது.

பெருந்தொற்று உலக அளவில் வர்க வேற்றுமையை மட்டுமில்லாமல் பாலின சமத்துவமின்மையையும் ஏற்படுத்தியிருக்கிறது. 2020-ம் ஆண்டில் மட்டும் பெண்கள் ஒட்டுமொத்தமாக 80,000 கோடி டாலர் வருமானத்தை இழந்திருக்கிறார்கள். ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, கரீபியன் ஆகிய நாடுகளில் உள்ள 100 கோடி பெண்களின் சொத்துகளைவிட 252 ஆண்களிடம் அதிகமாக இருக்கிறது.

பெருந்தொற்று இனப் பாகுபாட்டையும் அதிகரித்துள்ளது. 2-வது அலையில், இங்கிலாந்தில், வங்கதேசத்தைச் பூர்வீமாகக் கொண்டவர்கள்தான் பூர்வீக வெள்ளையர்களைவிட 5 மடங்கு அதிகமாக உயிரிழந்திருக்கிறார்கள்.

பிரேசிலில் உள்ள கறுப்பினத்தவர்கள்தான் வெள்ளை இன மக்களைவிட 1.5 மடங்கு அதிகமாக உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில், கறுப்பின அமெரிக்கர்களின் ஆயுட்காலம் வெள்ளையர்களைப் போலவே இருந்திருந்தால் 34 லட்சம் பேர் இன்று உயிருடன் இருப்பார்கள். இது நேரடியாக வரலாற்று ரீதியான இனவெறி மற்றும் ஆதிக்கத்துடன் தொடர்புடையது என்று அந்த அறிக்கை கூறுகிறது.

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?