Income Tax Canva
பிசினஸ்

வருமானவரி தாக்கல் : உங்களது அனைத்து சந்தேகங்களும், அதற்கான உரிய விளக்கமும் - விரிவான தகவல்

Gautham

சம்பாதித்த பணத்துக்கு வரி செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆடிட்டர் அலுவலகங்கள் மற்றும் வருமான வரித் துறை அலுவலகங்களில் மக்கள் கூட்டம் களைக்கட்டத் தொடங்கிவிட்டது.

கடந்த 2021 - 22 நிதியாண்டில் சம்பாதித்த மொத்த வருமானம் அல்லது வருவாய் 2.5 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால் கூட வருமான வரிப் படிவத்தைத் தாக்கல் வேண்டுமா என்கிற கேள்வி பலருக்கும் எழத் தொடங்கியுள்ளது.

Income Tax Return

ஆண்டுக்கு 2.5 லட்சத்துக்குள் சம்பாதிப்பவர்கள், எனக்கு இந்த குறிப்பிட்ட ஆண்டில் 2.5 லட்சத்துக்கு மேல் வருமானம் இல்லை என வருமான வரிப் படிவத்தைப் பூர்த்தி செய்து அரசுக்குத் தெரியப்படுத்துவது தான் Nil Return Filing என்பார்கள். இதற்கு நீங்கள் ஒரு பைசா கூட வரி செலுத்த வேண்டாம்.

ஆனால் படிவத்தை நிரப்பி அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்திய வருமான வரிச் சட்டத்தின் படி, ஒரு தனிநபர் ஒரு நிதியாண்டு காலத்தில் 2.5 லட்சம் ரூபாய்க்குள் வருமானம் ஈட்டி இருந்தால் அவர் வருமான வரிப் படிவத்தை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும் என்கிற அவசியமில்லை.

இவர்கள் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும்

1. ஒரு நிதியாண்டு காலத்துக்குள் டிடிஎஸ் வரிப் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால்

2. ஒரு நிதியாண்டில் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் மின்சாரக் கட்டணம் செலுத்தி இருந்தால்

3. ஒரு நிதியாண்டு காலத்தில் 2 லட்சம் அல்லது அதற்கு மேல் வெளிநாட்டுப் பயணங்களுக்கு செலவழித்திருந்தால்

4. வெளிநாடுகளில் சொத்து வைத்திருந்தால்

5. வெளிநாட்டில் உள்ள சொத்துக்கள் மூலம் ஏதேனும் பயனடைந்தால்

6. Double Taxation Avoidance Agreement-ன் கீழ் பயனடைந்திருந்தால்...

இவர்கள் அனைவரும் 2.5 லட்சம் ரூபாய்க்குள் வருமானம் ஈட்டினால் கூட கட்டாயம் வருமான வரிப் படிவத்தைத் தாக்கல் செய்ய வேண்டும்.

நன்மைகள் என்ன?

ஒருவேளை மேலே குறிப்பிட்ட எந்த விதியின் கீழும் நீங்கள் வரவில்லை, அதோடு உங்கள் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்துக்கும் குறைவுதான் என்றாலும் கூட வருமான வரி படிவத்தைத் தாக்கல் செய்யலாம். இப்படி போதிய வருமானம் இல்லாமல் வருமான வரிப் படிவத்தைத் தாக்கல் செய்வதால் சில பெரிய நன்மைகள் கிடைக்கும்.

வங்கிக் கடன்கள்:

தனி நபர் கடன், வீட்டுக் கடன், வியாபாரக் கடன்... என எந்தவகையான கடனாக இருந்தாலும், வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் நீங்கள் முறையாக வருமான வரிப் படிவத்தை தாக்கல் செய்துள்ளீர்களா என்று பார்ப்பார்கள். அப்படி எந்த ஒரு ஆண்டும் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து தாக்கல் செய்திருந்தால் உங்களுக்கு கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம்.

Loans

பாஸ்போர்ட் & விசா:

வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்புவோர் கட்டாயம் பாஸ்போர்ட் மற்றும் விசாக்களுக்கு விண்ணப்பிக்கும் போது வருமான வரிப் படிவத்தை தாக்கல் செய்திருப்பது நல்லது. நீங்கள் கடனாளியாக இல்லை, உங்கள் நாட்டு அரசாங்கத்துக்கு நீங்கள் முறையாக வருமான வரியைச் செலுத்துகிறீர்கள் என்பதற்கான அத்தாட்சி இது. எனவே வெளிநாடு செல்ல விரும்புபவர்கள், சம்பாதிக்கத் தொடங்கிய காலகட்டத்திலிருந்து வருமான வரிப் படிவத்தை சமர்ப்பிக்கத் தொடங்கிவிடுங்கள்.

டிடிஎஸ்:

நீங்கள் ஏதோ ஒரு தொழில் செய்கிறீர்கள், உங்கள் தொழில் மூலம் வரும் வருமானத்துக்கு நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் டிடிஎஸ் பிடித்தம் செய்கிறார்கள் என்றால், அத்தொகையை நீங்கள் ரீஃபண்ட் பெற கட்டாயம் வருமான வரிப் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் உங்களால் டிடிஎஸ் பிடித்தம் செய்த பணத்தை வருமான வரித் துறையிடமிருந்து பெற முடியாது.

பாஸ்போர்ட்

வருமான வரித் துறை நோட்டீஸ்:

ஒரு இந்தியர் வருமான வரிப் படிவத்தைத் தாக்கல் செய்யவில்லை எனில், அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்ப இந்திய வருமான வரித் துறைக்கு அதிகாரமிருக்கிறது. அப்படி ஏதேனும் நோட்டிஸ் வந்து உங்கள் ஆடிட்டரோடு வருமான வரித் துறை அலுவலகத்துக்கு அலைவதை விட, இப்போதே ஐடிஆர் படிவத்தை சரியாக பூர்த்தி செய்து சமர்பித்துவிடுங்களேன்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?