அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா : உலகிலேயே அதிகமாக பில்லியனர்கள் இருக்கும் நாடு எது தெரியுமா? Twitter
பிசினஸ்

அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா : உலகிலேயே அதிகமாக பில்லியனர்கள் இருக்கும் நாடு எது தெரியுமா?

Antony Ajay R

உலகில் இருக்கும் எந்தெந்த நாடுகளில் அதிகமான பில்லியனர்கள் இருக்கிறார்கள் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது ஃபோர்ப்ஸ் தளம்.

உலகில் உள்ள 2640 பில்லியனர்களைக் கொண்டு இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 2640 பேரும் 77 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் நாம் எதிர்பார்பது போலவே அமெரிக்கா முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்காவில் 735 பில்லியனர்கள் இருக்கின்றனர்.

கடந்த ஆண்டும் அதிக பில்லியனர்கள் உள்ள நாடாக அமெரிக்கா இருந்தாலும், உலகின் மிகப் பெரிய பணக்காரராக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெர்னார்ட் அட்னால்ட் இருந்தார்.

இந்த முறை எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ், பில்கேட்ஸ் உள்ளிட்ட அமெரிக்கர்கள் முதலிடங்களைப் பிடித்துள்ளனர்.

இரண்டாவது இடத்தில் இருப்பது இப்போது அமெரிக்காவின் மிகப் பெரிய போட்டியாளராக கருதப்படும் சீனா. ஆனால் இதில் சீனா மகிழ்ச்சிகொள்ள முடியாது.

கடந்த ஆண்டு 539 பில்லியனர்கள் இருந்த சீனாவில் இந்த ஆண்டு 495 பேர்தான் நிலைத்திருக்கின்றனர். சீனாவின் பில்லியனர்கள் வணிகத்தை இழந்திருக்கின்றனர் என்பதையே இதுக் காட்டுகிறது.

மூன்றாவது இடத்தில் இருப்பது நம் இந்தியா தான். 169 பேர் இந்தியாவில் பில்லியனர்களாக இருக்கின்றனர்.

இந்திய பில்லியனர்களின் மொத்த சொத்துமதிப்பு 675 பில்லியன் டாலர்கள். இது கடந்த ஆண்டை விட 75 பில்லியன்கள் குறைவு.

இந்திய பில்லியனர்கள் இழந்த இந்த 75 பில்லியனில் பெரும்பகுதி அதானியுடையது. ஹிண்டன்பெர்க் நிறுவனத்தின் அறிக்கைக்கு பிறகு அதானி 43 பில்லியன் டாலர் இழந்துள்ளார்.

ஜெர்மனி இந்த பட்டியலில் 4வது இடத்தைப் பிடிக்கிறது. ஜெர்மனியில் 126 பில்லியனர்கள் இருக்கின்றனர். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 134ஆக இருந்தது.

ஜெர்மனியைத் தொடர்ந்து ரஷ்யா இந்த பட்டியலில் 5வது இடத்தைப் பிடித்துள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?