ponniyin selvan twitter
சினிமா

Ponniyin Selvan I : யார் யார் குரலில் வெளியாகிறது பொன்னியின் செல்வன் டிரெய்லர்?

Keerthanaa R

இயக்குநர் மணிரத்னம், கல்கியின் காவிய படைப்பான பொன்னியின் செல்வன் புத்தகத்தை படமாக்கியிருக்கிறார். கார்த்தி, ஜெயம் ரவி முதல், ரகுமான் பிரகாஷ் ராஜ், ஜெயராம் பிரபு வரை, பல தலைமுறை நடிகர்கள் ஒன்று கூடியிருக்கும் இந்த Magnum Opus இரண்டு பாகங்களாக 5 மொழிகளில் வெளியிடப்படவுள்ளது.

முத\ல் பாகம், PS-I, வரும் செப்டம்பர் 30ஆம் தேதி அன்று வெளியாகவுள்ள நிலையில், இன்று மாலை 6 மணிக்கு இத்திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவிருக்கும் விழாவிற்கு, உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் வருகை தரவுள்ளார்கள்.

இதனை மெட்ராஸ் டாக்கீஸ் தன் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில், மாலை வெளியாகவுள்ள டிரெய்லர், ஐந்து மொழிகளில் ஐந்து பெரிய நட்சத்திரங்களின் குரல்களில் - "1 Trailer in 5 Legendary Voices" - வெளியிடப் போவதாக படக் குழு தெரிவித்திருக்கிறது.

அந்த வகையில், தமிழில் உலக நாயகன் கமல்ஹாசன், தெலுங்கில் ராணா டக்குபாட்டி, மலையாளத்தில் பிரிதிவிராஜ், கன்னடத்தில் கவிஞர் ஜெயந்த் கைங்கினி, மற்றும் இந்தியில் அனில் கபூர் ஆகியோர் குரல் கொடுக்கவுள்ளனர்.

ஏற்கனவே பொன்னி நதி, மற்றும் சோழா சோழா பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?