Trisha Krishnan Tattoo with Meaning Twitter
சினிமா

Trisha : புதிய டாட்டூ போட்டிருக்கிறாரா த்ரிஷா? வைரலாகும் புகைப்படம் - உண்மை என்ன?

Priyadharshini R

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. இத்தனை ஆண்டுகள் சினிமாவில் இருந்தாலும் அழகு குறையாமல் இன்றும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார் த்ரிஷா.

இதனால் த்ரிஷாவுக்கு சினிமாவில் பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன. திரிஷா நடிப்பில் தற்போது பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியாகவுள்ளது.

இப்படம் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதற்கான புரமோஷன் பணிகளில் தற்போது பிசியாக உள்ளார் திரிஷா.

இதுதவிர லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவாகும் லியோ படத்திலும் த்ரிஷா நடித்து வருகிறார்.

இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு பின் இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளதால், இப்படத்திற்கு ரசிகர்கள் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் த்ரிஷாவின் புதிய டாட்டூ என்று ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

த்ரிஷா தனது முதுகில் டிரைபாடு உடன் கூடிய கேமரா மற்றும் கிளாப் போர்டு ஆகியவற்றை டாட்டூவாக குத்தி இருக்கிறார்.

அவர் இந்த டாட்டூவை கடந்த 2016-ம் ஆண்டே போட்டுக்கொண்டாலும் பெரியளவில் இதுகுறித்த புகைப்படங்கள் வெளியானதில்லை.

தற்போது பொன்னியின் செல்வன் பட புரமோஷனின் போது எடுத்த புகைப்படங்களில் திரிஷாவின் டிரைபாடு கேமரா டாட்டூவை பார்த்து வியந்து அதனை வைரலாக்கி வருகின்றனர். இது த்ரிஷாவின் புதிய டாட்டூ என டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே நெஞ்சில் நீமோ என்கிற மீனை டாட்டூவாக போட்டுள்ளார் த்ரிஷா, கையில் தனது ராசியின் சின்னத்தை டாட்டூவாக குத்தி இருப்பார் இந்த இரு டாட்டூக்களை பலரும் பார்த்திருக்கக்கூடும். ஆனால் இந்த டாட்டூ புதியவை அல்ல, பழைய டாட்டூ தான் தற்போது இணையவாசிகள் அதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?