Rahman Twitter
சினிமா

"பொன்னியின் செல்வன் படம் பார்த்த பிறகு..." - ஏ.ஆர்.ரஹ்மான் சொன்ன ரிவியூ!

Antony Ajay R

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா நடிப்பில் இந்த மாதம் 30ம் தேதி வெளியாகிறது பொன்னியின் செல்வன் திரைப்படம்.

தமிழ் மக்களின் மனம் கவர்ந்த நாவலைப் படமாக்கும் அதிர்ஷ்டம் பல தசாப்தங்கள் கடந்து மணிரத்னத்துக்கு கிடைத்திருக்கிறது. படம் வெளியாவதை ஒட்டி படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் பணியாற்றிய நட்சத்திரங்கள் புரொமோஷன்களில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இதற்காக இந்தியா முழுவதும் பல இடங்களுக்குச் சென்று விளம்பரம் செய்து வருகின்றனர்.

நேற்று ஹைத்ராபாத்தில் நடந்த புரொமோஷனில் கலந்து கொண்ட ஏ.ஆர் ரஹ்மான், படம் பார்த்த தனது அனுபவத்தை பகிர்ந்திருந்தார்.

அப்போது அவர், "இந்த படம் பார்த்த பிறகு நான் நெட்ஃப்ளிக்ஸ், ப்ரைம் மற்ற வெளிநாட்டு படங்களைப் பார்ப்பதை நிறுத்திவிட்டேன். ஏனென்றால் இந்த நடிகர்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றனர். நம்முடைய கலாச்சாரம், நம்முடைய ரத்தம், நம்முடைய முகங்கள்... மிக்க நன்றி" எனப் பேசியிருந்தார்.

பொன்னியின் செல்வன் படம் ஹாலிவுட் படங்களுக்கு இணையான பிரம்மாண்டத்துடன் உருவாகியிருக்கிறது. இதன் பட்ஜட் 500 கோடி என்றுக் கூறப்படுகிறது. தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டு 120 நாட்களில் மொத்த படமும் எடுக்கப்பட்டது.

தற்போது பொன்னியின் செல்வன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?