தமிழில் அன்பு படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் பாலா. இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பியான இவர், வீரம், அண்ணாத்த உட்பட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மலையாளத்தில் அதிக படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
2010ம் ஆண்டு பாடகி அம்ருதா சுரேஷைக் காதலித்து திருமணம் செய்துகொண்ட பாலா, அவரைபிரிந்தார். கடந்த 2021ம் ஆண்டு எலிசபெத் உதயன் என்ற மருத்துவரை திருமணம் செய்துகொண்டார்.
பாலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பரிசோதனையில் இவருக்கு கல்லீரல் தொடர்பான பிரச்னை இருப்பது தெரியவந்தது. இதனால் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தநிலையில் பாலா உருக்கமாகப் பேசி ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார்.
அதில், ''என்னை மருத்துவமனையில் சேர்த்து ஒரு மாதம் ஆகிவிட்டது. இன்னும் 3 நாட்களுக்குள் எனக்கு முக்கிய அறுவைச் சிகிச்சை நடக்க உள்ளது.
இந்த அறுவைச்சிகிச்சையின்போது எனக்கு மரணம் கூட நேரிட வாய்ப்பு உள்ளது. உங்கள் பிரார்த்தனையால் உயிர் பிழைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. பிறப்போ இறப்போ கடவுள் முடிவு செய்வார்'' என்று கூறியுள்ளார். இன்று எங்களது 2-வது ஆண்டு திருமண நாள். என் மனைவி கொண்டாட விரும்பினார். அதனால் மருத்துவமனையில் கேக்வெட்டுகிறேன்.
இந்த சிகிச்சையின் போது தனக்கு ஏதாவது நேர்ந்தால் அடுத்து நடிகரை திருமணம் செய்துகொள்ளாமல் ஒரு டாக்டரை திருமணம் செய்துகொள் என்று தன் மனைவியுடம் கூறியிருக்கிறார்.
இந்த வீடியோவைப்பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய பிரார்சனை செய்து வருகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust