ஈ.ராமதாஸ்  Twitter
சினிமா

ஈ.ராமதாஸ்: ”சினிமா துறையில ரொம்ப நேர்மையா இருந்தாரு” - தந்தை மரணம் குறித்து மகன் உருக்கம்

சிவகார்த்திகேயனின் காக்கி சட்டை, வெற்றிமாறன் இயக்கிய விசாரணை, நயன்தாரா உடன் அறம், விஜய் சேதுபதியின் விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களில் நடித்த ஈ.ராமதாஸ் நேற்று இரவு மாரடைப்பு காரணமாக காலமானார்.

Priyadharshini R

தமிழ் சினிமாவின் எழுத்தாளரான ஈ.ராமதாஸ், சிறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., குக்கூ, காக்கி சட்டை, விசாரணை, தர்மதுரை, விக்ரம் வேதா, மாரி, நாடோடிகள் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

இவரது இயக்கத்தில் ராஜா ராஜா தான், சுயம்வரம், இராவணன், ஆயிரம் பூக்கள் மலரட்டும், வாழ்க ஜனநாயகம், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு போன்ற படங்களும் வெளியாகின.

நடிப்பு மட்டுமில்லாமல் இவர் பல திரைப்படங்களில் எழுத்தாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

இந்த நிலையில், ஈ.ராமதாஸ் நேற்று இரவு மாரடைப்பு காரணமாக காலமானார்.

அவரது உடல் சென்னை கே.கே.நகர் முனுசாமி சாலையில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

பின்னர் மாலை 5 மணியளவில் நெசப்பாக்கம் மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட உள்ளதாக ஈ.ராமதாஸ் அவரின் மகள் தெரிவித்துள்ளார்.

”சினிமா துறையில, அப்பா ரொம்ப நேர்மையா ஈடுபாட்டோட இருந்தாரு” என்று தந்தை குறித்து உருக்கமாக பேசியிருந்தார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?