இயக்குநர் பாலா - சூர்யா  ட்விட்டர்
சினிமா

Suriya: ’வணங்கான்’ படத்தில் இருந்து நடிகர் சூர்யா திடீர் விலகல் - காரணம் என்ன?

Keerthanaa R

வணங்கான் திரைப்படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகியுள்ளதாக இயக்குநர் பாலா தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து உருவான படம் வணங்கான். இந்த கூட்டணி இதற்கு முன்னர் நந்தா திரைப்படத்தில் பணியாற்றியிருந்தது.

2001ல் வெளியான நந்தா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் இத்திரைப்படம் சூர்யாவின் சினிமா கரியரில் திருப்புமுணையாகவும் அமைந்தது.

இதற்கு பிறகு, பிதாமகன் திரைப்படத்தில் இந்த கூட்டணி ஒன்றாக பணியாற்றியிருந்தது. பிதாமகன் படத்தில், நடிகர் விக்ரமும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்

பாலா - சூர்யா கூட்டணி மீண்டும் இணைவதால் வணங்கான் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. வணங்கான் திரைப்படத்தை நடிகர் சூர்யாவின் 2D தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை க்ரிதி ஷெட்டி நடிக்கவிருந்தார்.

இந்நிலையில் வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகியுள்ளதாக இயக்குநர் நேற்று தெரிவித்திருக்கிறார்

கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை இயக்குநர் பாலா வெளியிட்ட அறிவிப்பில், ’கதையில் நிகழ்ந்த சில மாற்றங்கள் காரணமாக’ இந்த விலகல் ஏற்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பில், “என் தம்பி சூர்யாவுடன் இணைந்து வணங்கான் என்ற திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களால், இந்த கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்ற சந்தேகம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது” என்று பாலா கூறியிருந்தார்.

மேலும், தன் மீதும், தன் கதையின் மீதும் நடிகர் சூர்யா அதிக நம்பிக்கை வைத்திருப்பதாகவும், அந்த அன்பிற்கும் நம்பிக்கைக்கும் ஒரு அண்ணனாக தன்னால் ஒரு சிறு தர்மசங்கடம் கூட ஏற்பட்டுத்திவிடக் கூடாது என்பது அவரது கடமை என பாலா தெரிவித்திருந்தார்.

இதனால், இருவரும் கலந்து பேசி, சூர்யா இந்த படத்திலிருந்து விலகுவது என ஒரு மனதாக, அவரது நலன் கருதி இந்த முடிவெடுத்துள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்படிருந்தது.

“’நந்தா’ படத்தில் நான் பார்த்த சூர்யா, ’பிதாமகன்’-இல் நீங்கள் பார்த்த சூர்யா போல வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம். மற்றப்படி ’வணங்கான்’ படப்பணிகள் தொடரும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?