Vijay இன்ஸ்டாகிராம்
சினிமா

Vijay: இன்ஸ்டாவில் அதிவேக 1 மில்லியன் ஃபாலோவர்ஸ்! 3வது இடத்தில் விஜய் - முதலிடம் யாருக்கு?

Keerthanaa R

இன்ஸ்டாகிராம் தளத்தில் அதிவேகமாக ஒரு மில்லியன் பின்தொடர்பவர்களை பெற்ற மூன்றாவது நபரானார் விஜய்.

சமூக வலைதள பக்கமான ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் விஜய். கடந்த 2013 ஆம் ஆண்டு இவரது ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டது.

அப்போதைய சமூகத்திற்கு ட்விட்டர் என்றால் இந்த தலைமுறைக்கு இன்ஸ்டாகிராம் தான் தகவல் தொடர்புகளுக்கு முக்கிய தளம்.

இதில் செலிபிரிட்டிகளுக்கு ஃபேன் பேஜுகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. சிலரிடம் அதிகாரப்பூர்வ கணக்கும் இருக்கும்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், நேற்று இன்ஸ்டாகிராமில் தனது அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கினார்.

லியோ பட லுக்கில் உள்ள புகைப்படத்துடன், “ஹலோ நண்பாஸ் அண்ட் நண்பீஸ்” என்று தலைப்பிட்டு முதல் பதிவு பகிரப்பட்டிருந்தது.

அவரது கணக்கு தொடங்கப்பட்ட சில மணி நேரத்திலேயே ஆயிரக்கணக்கில் இவருக்கு ஃபாலோவர்கள் குவியத்தொடங்கினர். தற்போதைய எண்ணிக்கை 4.8 மில்லியன்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் அக்கவுண்ட் தொடங்கப்பட்டு அதிவேகமாக 1 மில்லியன் பின்தொடர்பவர்களை பெற்ற மூன்றாவது நபராகியுள்ளார் நடிகர் விஜய்.

இவருக்கு 99 நிமிடங்களில் அதாவது ஒன்றரை மணி நேரத்தில் ஒரு மில்லியன் ஃபாலோவர்கள் குவிந்தனர். இவருக்கு முன் இரண்டாவது இடத்தில் ஏஞ்சலீனா ஜொல்லி இருக்கிறார். இவருக்கு 59 நிமிடங்களில் ஒன் மில்லியன் ஃபாலோவர்ஸ் சேர்ந்தனர்.

முதலாம் இடத்தில் பிடிஎஸ் இசைக்குழுவின் V என்ற நபர் இருக்கிறார். இவர் இன்ஸ்டாவில் கால் பதித்தது தான் போதும் என காத்திருந்தனர் இவரது பல கோடி ரசிகர்கள். ஒரு மணி நேரம் முடிவடைவதர்க்குள்ளாகவே, வெறும் 53 நிமிடங்களில் ஒரு மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்றார் V!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?