Mark Antony: U/A சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட தனிக்கை துறை? நடிகர் விஷால் குற்றச்சாட்டு ட்விட்டர்
சினிமா

Mark Antony: U/A சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட தனிக்கை துறை? நடிகர் விஷால் குற்றச்சாட்டு

Keerthanaa R

மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு இந்தியில் தனிக்கை சான்றிதழ் பெறுவதற்கு சென்சார் போர்டிற்கு ரூ.6.5 லட்சம் லஞ்சமாக வழங்கியதாக குற்றம்சாட்டியுள்ளார் நடிகர் விஷால். இந்த குற்றச்சாட்டு பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், விஷால், எஸ் ஜே சூர்யா, ரித்து வர்மா நடிப்பில் வெளியான திரைப்படம் மார்க் ஆண்டனி. டைம் டிராவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. மார்க் ஆண்டனி படத்திற்கு தனிக்கை துறை யு ஏ சான்றிதழை வழங்கியிருந்தது.

இந்நிலையில், இந்த திரைப்படத்திற்கு இந்தி மொழியில் யு ஏ சான்றிதழ் தர தனிக்கை துறை அதிகாரிகள் தன்னிடம் லஞ்சம் கேட்டதாக பகிரங்க குற்றச்சாட்டை வைத்திருக்கிறார் நடிகர் விஷால்.

கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி தனது X தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்ட நடிகர் , எவ்வளவு பணம், எத்தனை முறை பரிமாற்றப்பட்டது உள்பட தகவல்களை வெளியிட்டு பதிவிட்டிருந்தார். மகாராஷ்டிர மாநில முதல்வர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை குறிப்பிட்டு அந்த வீடியோவில் அவர் பேசியதாவது,

"நாங்கள் எங்களின் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் இந்தி சர்ட்டிஃபிகேஷனுக்காக மும்பையில் உள்ள மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தை அணுகினோம்.

சில தொழில்நுட்ப காரணங்களினால் நாங்கள் கடைசி நிமிடத்தில் தான் சான்றிதழ் பெற செல்ல நேர்ந்தது. இதனால் அங்கிருந்த அதிகாரிகள் எங்களுக்கு ஒரு கண்டிஷன் வைத்தனர்.

படத்தை பார்த்து தரம் நிர்ணயிக்க மற்றும் எங்களுக்கு சான்றிதழை தர என ரூ.6.5 லட்சம் பணம் தரவேண்டும் எனக் கூறினார்கள்."

"எங்களுக்கு வேறு எந்த மாற்றும் அளிக்கப்படவில்லை. திரைப்படம் பார்க்க 3 லட்சம் ரூபாயும், எங்களிடம் சான்றிதழை தருவதற்கு 3.5 லட்சமும் கேட்டனர். எங்களுக்கு வேறு வழி இல்லாததால், அந்த பணத்தினை கொடுத்து யு ஏ சான்றிதழ் பெற்று படம் வட நாட்டில் வெளியிடப்பட்டது.

இது மிகவும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வு. நம் சமுதாயத்தில் ஊழல் உழன்றுக்கொண்டிருப்பதை திரைப்படத்தில் காண்பிப்பது சரி, ஆனால் நிஜ வாழ்க்கையில் அது நடக்கிறது என்றால் அதனை ஜீரணித்துகொள்ள முடியவில்லை. அதுவும் ஒரு அரசாங்க அலுவலகத்தில்" என்று பேசியிருந்தார்.

தனிக்கை துறை அதிகாரிகள் கேட்டதாக சொல்லும் பணத்தை இரண்டு தவணைகளாக படக்குழு பரிமாற்றியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த வீடியோ சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தக்க விசாரணைகளை மேற்கொள்ள நேற்று உத்தரவிட்டுள்ளது. மத்திய திரைப்பட சான்றிதழ் அலுவலகம் இந்த குற்றச்சாட்டு குறித்து இன்னும் எந்த விதமான பதிலோ, விளக்கமோ வழங்கவில்லை.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?