பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் நடிகை அபிராமி. இந்த செய்தியை அன்னையர் தினமான நேற்று அவர் பகிர்ந்திருந்தார்.
கேரளாவை சேர்ந்த நடிகை அபிராமி. தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் தமிழ் மற்றும் மலையாளம் சினிமா துறையில் நடிகையாகவும் இருந்தவர். அவ்வப்போது நடிகைகளுக்கு டப்பிங்கும் செய்திருக்கிறார்.
ஏசியானெட் தொலைக்காட்சியின் டாப் டென் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர், மலையாளத்தில் வெளியான கதபுருஷன் படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
தமிழில் அர்ஜுன் நடித்த வானவில் திரைப்படம் மூலம் அறிமுகமானவர். மிடிள் கிளாஸ் மாதவன், சமுத்திரம், விருமாண்டி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
விருமாண்டி திரைப்படத்தில் இவர் நடித்த ‘அன்னலட்சுமி’ கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது.
நேற்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பல நடிகர் நடிகைகள் புகைப்படங்களை பகிர்ந்து அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், நடிகை அபிராமியும் தான் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் அவர், தன் கணவர் ராகுல் மற்றும் மகளுடன் போஸ் செய்திருந்தார், மகளின் முகம் ஹார்ட்டின் எமொஜியால் மறைக்கப்பட்டிருந்தது.
இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்திருந்த போஸ்ட்டில், “ராகுலும் நானும் ஒரு பெண் குழந்தைக்கு பெற்றோர் ஆகியுள்ளோம் என்பதை தெரிவிப்பதில் பூரிப்படைகிறோம். அவள் பெயர் கல்கி. எங்கள் மகளை நாங்கள் கடந்த ஆண்டு தத்தெடுத்தோம், அதன் பிறகு எல்லா விதத்திலும் எங்கள் வாழ்க்கை மாறியுள்ளது.
ஒரு புதிய தாயாக இன்று அன்னையர் தினத்தை நான் கொண்டாடுவதற்கு கொடுத்துவைத்துள்ளேன். நாங்கள் ஏற்றுள்ள இந்த புதிய பதவிக்கு எனக்கும் என் குடும்பத்தினருக்கும் உங்களுடைய நல்லாசிகள் தேவை” என்று பதிவிட்டிருந்தார்.
நடிகைக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் ஒரு பக்கம் குவிந்து வருகிறது மேலும், இந்த பதிவும் வைரலாகி வருகிறது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust