Radhika sarathkumar twitter
சினிமா

தமிழ்த்துறையை மீட்டுருவாக்க லண்டன் பல்கலைக்கழகத்திற்கு நடிகை ராதிகா நன்கொடை

Priyadharshini R

பொதுவாக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் தடம் பதிப்பார்கள், ஆனால் தற்போது வெள்ளித்திரையில் கொடி கட்டிப் பறந்தவர்கள், சின்னத்திரையில் கலக்கிக் கொண்டிருக்கின்றனர்.

சின்னத்திரை, வெள்ளித்திரை எனத் தனது நடிப்பின் மூலம் அனைவரையும் கட்டிப் போட்டவர் தான் நடிகை ராதிகா. சமீபத்தில் தமிழ் ஸ்டடீஸ் யூகே எனும் அமைப்பின் சார்பாக இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் மரியா மில்லர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் உலகெங்கும் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்கள் கவுரவிக்கப்பட்டனர். அந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களில் நடிகை ராதிகாவும் ஒருவர்.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருது வாங்கிய ராதிகா, அந்த தருணம் குறித்துப் பேசியிருந்தார்.

இந்த விருதிற்கு என்னைத் தேர்ந்தெடுத்த தேர்வுக்குழுவினருக்கும், திரைத்துறையில் தொடர்ந்து ஆதரவளிக்கும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் லண்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ்த்துறையை மீட்டுருவாக்க ₹1 லட்சம் நன்கொடையாக வழங்கினார் நடிகை ராதிகா சரத்குமார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?