Adipurush : prabas looks like Karna, not Rama - Kasthuri Shankar comments on movie poster Twitter
சினிமா

ஆதிபுருஷ் : ”பிரபாஸ் ராமர் போல் இல்லாமல் கர்ணன் போல இருக்கிறார்” நடிகை கஸ்தூரி விமர்சனம்

Priyadharshini R

இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை தழுவி உருவாகியுள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்' .

இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக க்ருத்தி சனோன் நடித்துள்ளனர்.

பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது.

ஆதிபுருஷ் படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருந்தனர்.தொடக்கத்திலிருந்தே இந்த படம் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. ஆதிபுருஷ் திரைப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி வெளியிடப்பட்டது.

டீசரை பார்த்த நெட்டிசன்ஸ், படத்தின் கிராபிக்ஸ் குறித்து விமர்சித்திருந்தனர். தொடர்ந்து வெளியான போஸ்டர்களும் விமர்சனத்திற்கு உள்ளானது.

படம் ஜூன் 16-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. திரையரங்குகளில் அனுமாருக்கு என ஒரு இருக்கை ஒதுக்கப்படும் என படக்குழு கூறியது பேசுபொருளானது.

இதற்கிடையில் இயக்குநர் ஓம் ராவத் மற்றும் கதாநாயகி க்ருத்தி சனோன் உள்ளிட்டோரும் திருப்பதி சென்று தரிசனம் செய்த நிலையில், க்ருத்தி சனோனை வழியனுப்பும்போது இயக்குநர் அவருக்கு முத்தம் கொடுத்ததால் அது சர்ச்சையானது. கோவிலுக்கு முன்பு இப்படி முத்தமிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது என பாஜக கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில் நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளத்தின் வாயிலாக கேள்வி ஒன்று எழுப்பியுள்ளார். அதில், "ராமர் மற்றும் லக்ஷ்மணன் மீசை,தாடியுடன் சித்தரிக்கப்படும் பாரம்பரியம் ஏதேனும் உள்ளதா? குறிப்பாக பிரபாஸ் இருக்கும் தெலுங்கு திரையுலகில், ஸ்ரீராமன் கதாபாத்திரத்தில் லெஜண்ட் நடிகர்கள் கச்சிதமாக நடித்துள்ளனர். ஆனால் இந்த போஸ்டரில் பிரபாஸை பார்க்கையில் ராமரை போல் தோன்றுவதற்கு பதில் கர்ணனைப் போல இருக்கிறார்" என்று பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?