Sanjeev with Baby News Sense
சினிமா

குழந்தை குறித்த அறிவிப்பில் கூட விளம்பரம்! - சஞ்சீவ் ஆல்யா இன்ஸ்டா போஸ்ட் பின்னணி

ஆதினி

தமிழ் சின்னத்திரை செலிபிரிட்டி ஜோடியான சஞ்சீவ்- ஆல்யா-விற்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. முதல் குழந்தை அய்லாவின் இரண்டாவது பிறந்த நாள் அண்மையில் பிரமாண்டமாக கொண்டாடப்பட்ட நிலையில், நேற்று ஆல்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்த விஷயத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருக்கிறார் சஞ்சீவ்.


ராஜா ராணி -2 தொடரில் நாயகி சந்தியா -வாக நடித்து வந்தார் ஆல்யா மானசா. பிரைம் டைம் சீரியல் என்பதால் எதிர்பார்த்ததை விட நல்ல ரேட்டிங்கில் சீரியல் ஓடிக் கொண்டிருந்தது. ஆல்யா இரண்டாவதாக கர்ப்பமான காரணத்தினால் சீரியலில் இருந்து விலகிவிட்டார். அவருக்குப் பதில் ரியா என்பவர் சீரியலில் கமிட் ஆனார். ஆல்யா பிரசவத்துக்குப் பிறகு மீண்டும் ராஜா ராணி-2 வில் சந்தியாவாகத் தொடர்வார் என்று சொல்லப்பட்ட நிலையில், நேற்று முன் தினம் ரசிகர்களுடன் இன்ஸ்டாவில் கேள்வி பதில் செஷனில் உரையாடிய ஆல்யா, ``நான் மீண்டும் ராஜா ராணி-2 வில் நடிக்க மாட்டேன்.’’ என்று சொல்லிவிட்டார். இதனால் அவரின் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஆல்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்த விஷயத்தை சஞ்சீவ் மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார். ஆண் குழந்தைக்கு அர்ஷ் என்று பெயர் வைத்துள்ளது இந்த ஸ்டார் ஜோடி.

Sanjeev , Alya Manasa

ஆல்யா தனது Baby bump- நகல் எடுத்து, கிராஃப்ட் ஆக உருவாக்கியுள்ளார். தாய்ப்பாலில் நகைகள் செய்யும் போக்கு டிரெண்டாகி வருகிறது. அதே போன்று, தனது கர்ப்ப கால வயிற்றை கிராஃப்ட் ஆக மாற்றி, அதில் செடிகளை வைத்துள்ளார் ஆல்யா. அதனைச் செய்து கொடுத்த கம்பனிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் விளம்பரம் செய்யும் விதமாகவும் ஆல்யாவின் இன்ஸ்டா பக்கத்தில் இரண்டாவது குழந்தை குறித்த அறிவிப்பு போஸ்டில் மென்ஷன் செய்யப்பட்டுள்ளது. இதனை சில ஃபேன் பக்கங்கள் விமர்சித்துள்ளன. குழந்தை பிறந்த மகிழ்ச்சியான விஷயத்தை ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்ளும் போஸ்டில் கூட விளம்பரமா? என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?