Thalaivar 171 : ரஜினி படத்தில் நடிக்க மறுத்த ஷாருக்கான் - என்ன காரணம்? Twitter
சினிமா

Thalaivar 171 : ரஜினி படத்தில் நடிக்க மறுத்த ஷாருக்கான் - என்ன காரணம்?

Priyadharshini R

கமல்ஹாசன் மற்றும் விஜயை வைத்து படம் இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து தலைவர் 171 வது படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் தொடங்கவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

ஜெயிலர் படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர், அது அந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு உதவியது. ரஜினியின் அடுத்த படமான வேட்டையன் படத்திலும் இதே பாணியை தொடர்கின்றனர்.

ஒவ்வொரு மொழியிலிருந்து முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். அதேபோல தற்போது தலைவர் 171 வது படத்திலும் இதே பாணியை கையாள உள்ளனர்.

பொதுவாக லோகேஷ் படங்களில் மற்ற மொழிகளிலிருந்து முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பது பொதுவானது.

இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க ஷாருக்கானிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.

ஷாருக்கான்

ஷாருக்கானுக்கு லோகேஷ் கனகராஜ் கூறிய கதை பிடித்திருந்தாலும் இனி ஹீரோவாக மட்டுமே படங்களில் நடிக்க போவதாக முடிவு எடுத்துள்ளதால் இந்த போன்ற கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இதனால் தற்போது லோகேஷ் மற்றொரு பாலிவுட் நட்சத்திரமான ரன்வீர் சிங்கிடம் கதை கூறியுள்ளார்.

அவருக்கு தற்போது கதை பிடித்து விட்டதாகவும் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிவுள்ளது ஒருவேளை ரன்வீர் சிங் இந்த படத்தில் நடித்த கோலிவுட்டில் அவர் அறிமுகமாக முதல் படமாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?