கோவிலுக்கு இவர்கள்தான் வரணுமா? எந்த கடவுள் சொல்லுச்சு - அமலாபாலுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் ஆதரவு Twitter
சினிமா

கோவிலுக்கு இவர்கள்தான் வரணுமா? எந்த கடவுள் சொல்லுச்சு - அமலாபாலுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் ஆதரவு

சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படாதது குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Priyadharshini R

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அவர்களும் இவர்களும் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் ஐஸ்வர்யா ராஜேஷ் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் ரம்மி படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

இந்தநிலையில், தி கிரேட் இந்தியன் கிச்சன் படக்குழுவின் செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிடம் சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா ராஜேஷ்,

கடவுள் எல்லோருக்கும் ஒன்று தான். ஆண், பெண் வித்தியாசமெல்லாம் கடவுளுக்கு கிடையாது. எந்தக்கடவுளும் என் கோவிலுக்கு இவர்கள் வரலாம், அவர்கள் வரக்கூடாது என்று சொல்லவில்லை. அப்படி எந்த கடவுளாவது சொல்லியிருக்கிறார்களா? இருந்தால் சொல்லுங்கள்.

எந்த கடவுளும் இது பண்ணக்கூடாது, இது சாப்பிடக்கூடாது என்று சொல்வதில்லை, எல்லேமே மனிதர்கள் உருவாக்கியது தான். நான் இது போன்ற கட்டுப்பாடுகளை எப்போதும் நம்புவதில்லை.

பொண்ணுங்களுக்குனா தீட்டா..எந்த கடவுள் சொல்லுச்சு. நான் நடித்த படத்தில் கூட இது குறித்து வசனம் பேசியிருப்பேன் என்றார்.

Amala paul

மேலும் இப்பொழுது கூட ஆணாதிக்கம் இருக்கிறது. ஆணாதிக்கம் என்பது கிராமத்து பக்கம் நிறைய இருக்கின்றது என்பது எனது கருத்து என்றார்.

சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படாதது குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் நடிகை அமலா பால் கேரளாவில் உள்ள கோவிலுக்கு சென்றபோது மாற்று மதம் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?