Thalapathy 67 : விஜய் படத்தில் நடிக்கிறாரா 'அமலா ஷாஜி?' - உண்மை என்ன? Twitter
சினிமா

அமலா ஷாஜி : விஜய் 'Thalapathy 67' படத்தில் நடிக்கிறாரா '?' - உண்மை என்ன?

Antony Ajay R

சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ், ஷார்ட்ஸ் மூலம் பிரபலமானவர் அமலா ஷாஜி.

இன்ஸ்டாகிராமில் 3.6 மில்லியன் ஃபாலோவர்கள் வைத்துள்ள இவர் எப்போது வேண்டுமானாலும் சினிமாவில் அறிமுகமாகலாம் என்ற நிலையே இருக்கிறது.

சொல்லப்போனால், அவரது ரசிகர்கள் அவரது சினிமா என்ட்ரிக்காக காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை முதல் அமலா ஷாஜி தளபதி 67 படத்தில் நடிக்கிறாரா என்ற பேச்சு எழுந்துள்ளது.

நேற்று முதல் தளபதி 67 படத்தில் நடிப்பவர்கள் குறித்து தயாரிப்பு நிறுவனம் போஸ்டர்கள் வெளியிட்டு வருகிறது. இன்று த்ரிஷாவின் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில் அமலா ஷாஜியின் போஸ்டரை எதிர்நோக்குகின்றனர் 2கே கிட்ஸ்கள்.

தளபதி 67 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிறது. செவன் ஸ்கிரீன் லலித் குமார் தயாரிக்கிறார்.

அனிரூத் இசையமைப்பில், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், சாண்டி என பெரிய நட்சத்திரபட்டாளமே நடிக்கிறது.

நடிகர்கள் தனியான விமானத்தில் காஷ்மீர் சென்றனர். அந்த விமான நிலைய புகைப்படங்கள் வைரலாக பகிரப்பட்டன.

இப்போது அமலா ஷாஜியும் பதிவிட்டுள்ள விமான நிலையப்புகைப்படம் தான் புதிய பேச்சைக் கிளப்பி விட்டிருக்கிறது.

அமலா ஷாஜி அந்த புகைப்படத்துக்கு "it's happening" என தலைப்பிட்டிருந்தார்.

இதனால் அவர் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கலாம் என நினைத்தனர். அத்துடன் அந்த இடம் டெல்லி விமானநிலையம் என்பதால் அமலாஷாஜியும் தளபதி 67 படத்தில் இணைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

அவரது கமன்ட்டில் "தளபதி 67-ஆ இருக்குமோ" என ரசிகர் செய்த கமன்டை pin செய்து முதலில் வைத்துள்ளார் அமலாஷாஜி.

இதுகுறித்து அவரைத் தொடர்புகொள்ள முயற்சித்தோம். அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை. நெருங்கிய வட்டாரத்தினரிடம் விசாரித்ததில் அவர் வேறுவேலையாக சென்றிருப்பதாக கூறுகின்றனர்.

இது குறித்து பல பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?