Amber Heard Twitter
சினிமா

"ஆம்பர் ஹெர்ட் தான் உலகின் அழகான பெண்" - கிரேக்க முறை என்ன சொல்கிறது?

Antony Ajay R

பண்டைய கிரேக்க முறையான PHI முறையைப் பயன்படுத்தி அறிஞர் ஒருவர் உலகின் மிக அழகான நபர்கள் இவர்கள் தான் என கணித்துள்ளார். இந்த முறையை க்ரீக் கோல்டன் ரேஷியோ எனவும் அழைக்கப்படுகிறது.

லண்டனில் உள்ள மேம்பட்ட முக அழகுசாதன மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மையத்தைச் சேர்ந்தவர் டாக்டர் ஜூலியன் டி சில்வா. இவர் தான் இந்த முடிவுகளை வெளியிட்டிருப்பது. இவர் ஆம்பரின் முகம் மிகச் சரியான முக வடிவமைப்புடன் 91.85 சதவீதம் ஒத்துப்போவதாக கூறுகிறார்.

இந்த முறை Face Mapping எனப்படுகிறது. இது கூறும் சரியான முக வடிவத்துடன் இருப்பவர்கள் அதிகமாக பிறரின் கவனத்தை ஈர்க்க முடியும் என்று கூறுகின்றனர்.

'ஃபேஸ் மேப்பிங் சீனாவில் தொடங்கியது. சீன மருத்துவ முறையில் உடலில் நிகழும் மாற்றங்களை முகத்தில் ஏற்படும் மாற்றத்தை வைத்து கணிக்கும் நடைமுறை இருந்திருக்கிறது.

இது கால காலமாக வளர்ந்து அழகுடன் தொடர்பு படுத்தப்பட்டிருக்கிறது. கிரேக்கத்தில் இயற்கையில் ஒவ்வொன்றும் எப்படி இருக்க வேண்டும் என்கிற பண்டைய கணக்குப் படி கோல்டன் ரேஷியோவில் அதாவது, 1:1618 என்ற விகிதத்தில் இருக்கும் முகம் அழகானது எனக் கருதப்படுகிறது.

Robert Pattinson

இது மூக்கு மற்றும் உதட்டுக்கு இடையிலான இடைவெளி மற்றும் உதடு மற்றும் கன்னத்துக்கு இடையிலான இடைவெளி ஆகியவற்றைக் கொண்டு அளவிடப்படுகிறது எனக் கூறுகின்றனர்.

ஆண்களிலும் அழகன் இருக்கிறார் என ராபர்ட் பேட்டின்சன் என்ற ஹாலிவுட் நடிகரை முன் வைக்கின்றனர். அவரது உடல் 92.15 விழுக்காடு சரியாக இருக்கிறதாம்.

ஆம்பர் மற்றும் பேட்டின்சனுக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஒருவேளை நமது முகத்தை கணக்கிட்டால் இவர்களை விட அதிக பெர்ஃபெக்டாகவும் இருக்கலாம்.

உலகில் மிக அழகான நபரே 92.15 விழுக்காடு தான் சரியான விகிதத்தில் இருக்கிறார் என்றால் அந்த விகிதத்துக்குக்கு முழுமையாக எத்தனை மனிதர்கள் பொருந்த முடியும்?

டாக்டர் ஜூலியன் டி சில்வா சோதித்தவர்களில் ஒருவர் கூட சரியான முகத்தை கொண்டிருக்கவில்லை எனில், மனிதர்களில் முகங்கள் தவறாக இருக்கிறதா அல்லது அவர்கள் கூறும் கோல்டன் ரேஷியோ தவறானதா?

இந்த ஃபேஸ் மேப்பிங் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதனை பிளாஸ்டிக் சர்ஜரிக்கு பரிந்துரைப்பதும் சரியானதல்ல என்கிறார்கள்.

இயற்கையில் ஒருவருக்கு இருக்கும் முக வடிவம் மற்றொருவருக்கு இருப்பது கிடையாது. குறைந்த பட்சம் 1 வித்தியாசத்தையாவது நமக்குக் கொடுத்திருக்கிறது இயற்கை.

இது இயற்கையாகவே நாம் அனைவரும் தனித்துவமானவர்கள் என்பதைத்தான் சொல்கிறது. அத்துடன் அழகானவர்களும் கூட. ஆம்பர் ஹெர்டோ, ராபர் பேட்டின்சனோ கிரேக்க அளவு கோளுக்கு பொருத்தமானவர்கள் என்று கூறலாமே தவிர அழகு என்பது அனைவருக்கு உரித்தானது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?