Mamannan: ”இது 20, 30 வருஷமா எனக்குள்ள இருந்த ஆதங்கம்” 50வது நாள் விழாவில் ரஹ்மான் பேச்சு  twitter
சினிமா

Mamannan: ”இது 20, 30 வருஷமா எனக்குள்ள இருந்த ஆதங்கம்” 50வது நாள் விழாவில் ரஹ்மான் பேச்சு

இந்த கதை எனக்குள் 30 ஆண்டுகளாக இருந்த ஆதங்கம். ஏன் இப்படி நடக்கிறது என்று. என்னால் இது பற்றி இசையில் எதுவும் செய்ய முடியவில்லை, அதனால் செய்கிறவர்களுடன் இணைந்துவிட்டேன்.

Keerthanaa R

மாமன்னன் படத்தின் கதை தனக்குள் பல ஆண்டுகளாக இருந்த ஆதங்கம் என்று கூறியிருக்கிறார் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான்.

கடந்த ஜூன் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது மாமன்னன் திரைப்படம். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

மாமன்னன் படம் எப்படியிருக்கிறது? உதயநிதி - வடிவேலு கூட்டணி திரையரங்கை அதிரவைத்ததா?

தமிழகத்தின் அரசியல் கட்சிகளுக்கு உள்ளேயே நிலவிய சாதிய பாகுபாடு குறித்த விஷயங்களை மையப்படுத்தி திரைப்படம் உருவாக்கியிருந்தார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

மாமன்னன் இன்றும் சமூகத்தில் நிலவி வரும் பல விஷயங்களின் மீது விவாதத்தை எழுப்பியது. நகைச்சுவை நடிகராக ரசிகர்களை கவர்ந்த வடிவேலு, இறுக்கமான, சாந்தமான கதாபாத்திரத்தில் மனதை கனக்கச் செய்திருந்தார்.

தனது தந்தையின் வடிவமும், தேவர் மகனின் இசக்கி கதாபாத்திரத்தின் நீட்சியும் தான் வடிவேலுவின் மாமன்னன் கதாபாத்திரம் என இயக்குநர் இசை வெளியீட்டு விழாவில் பேசியிருந்தார்.

இந்நிலையில், நேற்று சென்னையில் திரைப்படத்தின் 50வது நாள் வெற்றி விழா நடைபெற்றது. இதில் மாமன்னன் படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் பேசியிருந்தார்.

“இந்த கதை எனக்குள் 30 ஆண்டுகளாக இருந்த ஆதங்கம். ஏன் இப்படி நடக்கிறது என்று. என்னால் இது பற்றி இசையில் எதுவும் செய்ய முடியவில்லை, அதனால் செய்கிறவர்களுடன் இணைந்துவிட்டேன்.

கதை கேட்டபோது படம் இவ்வளவு நன்றாக வெளிவரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. வடிவேலுவின் ஒரு காட்சியை பார்த்தேன். படம் நன்றாக வரவேண்டும் என்று முடிவுசெய்தேன்” என்று கூறியிருந்தார் ரஹ்மான்.

ரஹ்மானின் பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது. மாமன்னன் தியேட்டரில் வசூல் சாதனை படைத்தது. பின்னர் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி இந்திய அளவில் டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தை பெற்றிருந்தது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?