சமீப காலங்களில் நடிகர்கள் விளையாட்டு வீரர்கள் தொடங்கி சாதாரண மக்கள் வரை வீகன் டயட் மேல் கவனம் செலுத்தி வருகின்றனர். பாலிவுட் நடிகை ஜெனிலியா மற்றும் கணவர் ரித்தேஷ் வீகன் உணவுகளை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார். தான் வீகன் ஆக மாறப்போவதாக தன் டிவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தது ரசிகர்களிடையே வைரலானது. ஆனால், இதில் விஷயம் என்னவென்றால், முழுக்க வீகன் ஆக ரஹ்மான் மாறிவிடவில்லை.
அவரது டிவிட்டர் பதிவில், "அடுத்த பத்து நாட்களுக்கு வீகனாக மாறுகிறேன்" என்று கூறியிருக்கிறார்.
முகரம் பண்டிகை தொடங்கியதால் ரஹ்மான் இந்த பதிவை பதிவிட்டிருக்கலாம் என்பது ரசிகர்களின் கணிப்பு. இந்த ட்வீட்டை ரஹ்மான் பகிர்ந்ததும் வந்த முதல் பதில், பாரி சால்னிடம் இருந்து தான். " வேண்டவே வேண்டாம் நமக்கு இந்த வம்பு! பால் தயிர் தேன் அனைத்தும் நம் உடம்புக்கு மருந்து." என்று அவர் பதிவிட்டிருந்தார்!
பாரி சாலன் மட்டுமல்ல, பலரும் ரஹ்மானிடம் இந்த ட்வீட்டை குறித்த பல்வேறு கமென்ட்டுகளை கூறி வருகின்றனர். வைரலாகி வருகிறது இசைப்புயலின் இந்த வீகன் ட்வீட்.
தற்போது அமெரிக்காவில் ம்யூசிகல் டூர் மேற்கொண்டுள்ள இசைப்புயல், இந்த மாதம் முழுவதும் அந்நாட்டின் பல்வேறு இடங்களில் கான்சர்ட்கள் நடத்தவுள்ளார்.
இரவின் நிழல், கோப்ரா ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ள ரஹ்மான், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனுக்கும் இசையமைத்திருக்கிறார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாடலான, 'பொன்னி நதி' நேற்று வெளியானது குறிப்பிடத்தக்கது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust