Beast Movie

 

Twitter

சினிமா

அரபிக் குத்து : உலக அளவில் சாதனை படைத்த பீஸ்ட் பாடல்

விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் உலக அளவில் பெரிய சாதனை படைத்தது வருகிறது .

Newsensetn

கடந்த பிப்ரவரி மாதம் 14 ம் தேதி அன்று காதலர் தினத்தன்று தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் பாடல் ஒன்றை 'அரபிக் குத்து' அதன் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தங்களது யூடியூப் சேனலில் வெளியிட்டது. நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுத அனிருத் இசையமைக்க கோலமாவு கோகிலா, டாக்டர் பட புகழ் நெல்சன் அதை இயக்கியுள்ளார். இந்தப் பாடல் வெளியாவதற்கு முன்பே இந்த பாடல் எப்படி உருவானது என ஒரு மேக்கிங் வீடியோ விட அது அந்தப் பாடலுக்கான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் மேலும் எகிற வைத்தது

மேக்கிங் வீடியோவில் சிவகார்த்திகேயன் அனிருத் மற்றும் நெல்சன் மூவரும் கலந்துகொண்டு பாடலை உருவாக்கும் விதம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.அரபிக் குத்து லிரிகல் வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே ட்ரெண்ட் ஆனது.

தற்போது அரபிக் குத்து பாடல் உலகளவில் ஒரு மிகப்பெரும் சாதனை படைத்துள்ளது. இந்தியாவிலிருந்து வேறு எந்த ஒரு பாடலும் செய்யாத புதிய சாதனை. Sportify இசை தளத்தில் டாப் 200 பாடல்களில் ஒன்றாக நுழைந்து டாப் 4 ஆம் இடத்தை பிடித்துள்ளது. பீஸ்ட் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இதை தங்களது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ளது.

Arabic Kuthu

அரபிக் குத்து பாடல் வெளியாகி 12 நாட்களிலேயே 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று இதற்கு முன் சாதனை படைத்த தமிழ் பாடல்களை ஓரங்கட்டியுள்ளது.

இதற்கு முன் ரவுடி பேபி பாடல் 18 நாட்களில் இந்த சாதனையை படைத்தது.சந்தோஷ் நாராயணன் இசையில் வந்த என்ஜாய் எஞ்சாமி பாடல் 29 நாட்களில் இந்த சாதனையை அடைந்தது.

தற்போது இந்த அனைத்து சாதனைகளை தளபதி விஜயின் அரபிக் குத்து பாடல் முறியடித்ததை விஜய் ரசிகர்கள் வலைத்தளங்களில் ட்ரண்ட் செய்து மகிழ்ச்சியை கொண்டாடி வருகிறார்கள்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?