Azeem vs Vikraman : உண்மையான வின்னர் யார்? - Bigg Boss மீது ரசிகர்கள் அதிருப்தியா?  Twitter
சினிமா

Azeem vs Vikraman : உண்மையான வின்னர் யார்? - Bigg Boss மீது ரசிகர்கள் அதிருப்தியா?

Antony Ajay R

பிக்பாஸ் சீசன் 6ன் வெற்றியாளராகியிருக்கிறார் அசீம். இவர் மீது அதிகமாக விமர்சனங்கள் வைக்கப்பட்ட போதிலும் மக்கள் அதிக வாக்குகளை அளித்து இவரை வெற்றி பெற வைத்துள்ளனர்.

21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த போட்டியில் கடைசி நாளில் விக்ரமன், அசீம், ஷிவின் ஆகிய மூவர் மட்டுமே இருந்தனர்.

இவர்களில் அசீமின் கைகளைத் தூக்கி அவரை வெற்றியாளராக அறிவித்தார் கமல்ஹாசன். அவரது அறிவிப்பு தான் இறுதியானது என்றாலும் ரசிகர்கள் உண்மையான வெற்றியாளர் யார் எனக் கேள்வி எழுப்பத் தொடங்கியிருக்கின்றனர்.

போட்டி நடைபெற்ற நாட்களில் அதிகப்படியான கோபம் மற்றும் மோசமான வார்த்தைகளை வெறுப்பேற்றும் நகைச்சுவைகள் என எதிர்மறையான வழியைக் கையாண்டார் அசீம்.

இதனால் மக்கள் பெரிய அளவில் அவருக்கு எதிராகவே நின்றனர். இருப்பினும் அவரே அதிகமாக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது பலருக்கும் மர்மமாகவே இருந்திருக்கிறது.

ஒரு பக்கம் மக்கள் அசீமை Toxic என்ற வகைப்பாட்டிலேயே வைத்திருந்தனர். மறுபக்கம் தெளிவான பார்வை மற்றும் நிதானமான கண்ணியமான நடத்தைகளால் மக்களை ஈர்த்தார் விக்ரமன்.

ஷிவினும் புத்திசாலியான போட்டியாளராக கருதப்பட்டார் என்பதை இணையத்தில் காண முடிகிறது.

எனவே பிக்பாஸ் போட்டியின் முடிவு யாருக்கும் மகிழ்ச்சி அளிக்காததாகவே இருந்திருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?