மூர்த்தி  Hotstar
சினிமா

பாக்கியலட்சுமி பாண்டியன் ஸ்டோர்ஸ் சங்கமம் அப்டேட்ஸ் : கோபியை வெளுத்து வாங்கும் மூர்த்தி

NewsSense Editorial Team

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி-பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா சங்கமம் ரசிகர்களிடம் அப்கிளாஸ் அள்ளி வருகிறது. அதற்கு முக்கிய காரணம் நம் பாக்கியலட்சுமி தொடரின் `வில்லன்’ நாயகன் கோபி.

ஒவ்வொரு முறையும் பாக்கியலட்சுமி - பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா சங்கமம் என்று ஒளிபரப்பாகும் போதெல்லாம், இரண்டு மூன்று எபிசோடுகள் தாண்டியதும் சலிப்பு தட்டிவிடும். ஆனால் இம்முறை ஒவ்வொரு எபிசோடும் செம விறுவிறுப்பாக நகர்கிறது.

பாக்கியலட்சுமியை ஏமாற்றி, தன் கல்லூரி சிநேகிதி ராதிகாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார் கோபி. பாக்கியாவை ஏமாற்றி கையெழுத்து வாங்கி விவாகரத்தும் அப்ளை செய்கிறார். இதனிடையே கோபியின் இளைய மகன் எழிலுக்கும், கோபியின் அப்பாவுக்கும் அவரின் காதல் விவகாரம் தெரிய வருகிறது. கோபியின் அப்பா இந்த விவகாரம் குறித்து கோபியிடம் விவாதம் செய்யும் போது, தவறி மாடிப் படியில் விழுந்து பேச முடியாமல் போகிறது. இது கோபிக்கு சாதகமாகி விட, ராதிகா வீட்டுக்கு அடிக்கடி சென்று வருகிறார்.

கோபி

தன் மாமனார் வீல் சேரில் , பேச முடியாமல், நடக்க முடியாமல் முடங்கி விடக் கூடாது, என்பதற்காக, பாக்யா. அவரின் பிறந்த நாளை கிராண்டாக கொண்டாட நினைக்கிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தைப் பிறந்தநாள் விழாவுக்கு அழைக்கிறார். ராதிகாவையும் அழைக்கிறார். பிறந்த நாள் விழாவில் ராதிகா வந்ததும் ரூமுக்குள் சென்று ஒளிந்து கொள்கிறார் கோபி. ராதிகா கிளம்பியது, ரூமுக்குள் குத்தாட்டம் போட்டு விட்டு, ராதிகாவை சந்திக்கக் கிளம்புகிறார்.

வீட்டிலிருந்து கொஞ்சம் தொலைவில் ராதிகாவை சந்தித்துப் பேசுகிறார் கோபி, இந்த காட்சியை மூர்த்தி பார்த்துவிடுகிறார். தனத்திடம் இதனை சொல்கிறார். மூர்த்தி தனம் கதிர் மூவரும் இணைந்து கோபியின் திருட்டுத்தனத்தை அம்பலமாக்க பிளான் போடுகிறார்கள்.

இன்றைய எபிசோடில் ராதிகா-கோபி ரிலேஷன்ஷிப்பை உறுதி செய்ய தனம் - மூர்த்தி இருவரும் ராதிகாவின் வீட்டிற்கு செல்கின்றனர். ராதிகாவிடம் கோபி குறித்து விசாரிக்கின்றனர். தனக்கு பாக்யாவின் கணவர் யாரென்றே தெரியாது என்கிறார். அடுத்ததாக தனம் ராதிகாவிடம் நீங்க யாரை கல்யாணம் பண்ணிக்க போறீங்க’’’ என்று கேட்க, தன்னை திருமணம் செய்து கொள்ளப் போகும் நபரின் புகைப்படத்தைக் காட்டுகிறார் ராதிகா. அந்த போட்டோவில் கோபி இருப்பதைப் பார்த்து தனமும் மூர்த்தியும் அதிர்ந்து விடுகின்றனர்.

நாளைய எபிசோடில் கோபியிடம் மூர்த்தி கோபமாகத் திட்டுகிறார். ``பாக்கியாவுக்குத் துரோகம் செய்றீங்களே வெக்கமா இல்லியா’’ என்று மூர்த்தி கோபிக்கு நேராகக் கேள்வி கேட்க, கோபி, ’’என்ன கேள்வி கேட்க நீங்க யாரு?’’ என்று வாக்குவாதம் செய்கின்றனர். என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?