Beast Release  Twitter
சினிமா

பீஸ்ட் பட ரிலீஸுக்கு ரசிகர்கள் வைத்த கட்-அவுட்: அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு

Priyadharshini R

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல மொழிகளில் இப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Vijay - Rangasamy

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் திரையிடப்பட உள்ள நிலையில் இதனை கொண்டாடும் விதமாக விஜய் ரசிகர்கள் மாநில முழுவதும் பல்வேறு இடங்களில் பிரமாண்ட பேனர்கள் வைத்துள்ளனர்.

ரசிகர்கள் வைத்துள்ள பெரும்பாலான பேனர்களில் முதலமைச்சர் ரங்கசாமி விஜயை சந்தித்த புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பது புதுச்சேரி அரசியல் கட்சியினரிடயே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

puducherry

இதற்கிடையில் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில் புதுச்சேரி திரையரங்குகளில் கட்டணம் ரூ.100 வரை உயர்த்தப்பட்டுள்ளதாக ஒரு புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாக பரவியது.

இதற்கு சமூகவலைத்தளங்களில் மக்கள் தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்து வந்த நிலையில், கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று புதுச்சேரி அரசு விளக்கம் கொடுத்துள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.


Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?