Serial Heroines Twitter
சினிமா

தமிழ் சீரியல்களின் டாப் 5 மருமகளின் லிஸ்ட் இதோ - ஒரு அடடா ரிப்போர்ட்

என்னதான் கஷ்டங்கள் வந்தாலும் அவை அனைத்தையும் உடைத்தெரிந்து, தங்களுக்கான பாதையை வடிவமைத்துக்கொண்டு ரசிகர்கள் மனதில் இடத்தை பிடித்துள்ள தமிழ் சீரியல்களின் சிறந்த மருமகள்களின் லிஸ்ட் இதோ

ஆதினி

பாக்கியலட்சுமி - விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரின் நாயகி பாக்கியா குடும்பத்தினர் மனம் அறிந்து நடந்து கொள்பவர். பெரிதாக படிக்கவில்லை என்றாலும், தனக்கு நன்றாக வரும் சமையல் கலையை வைத்து சுய தொழில் செய்பவர். தன்னை அடியோடு வெறுக்கும் மாமியார் மனதை தன் அன்பால் வென்றவர். மாமனாருக்கு உடல்நிலை சரியில்லாத போது, கணவன் பணம் இல்லை என்று சொன்ன பிறகும், இரவு பகலாக சமையல் பிஸ்னஸ் செய்து மருத்துவ செலவுகளை பார்த்து கொண்டவர். பிறர் கையை எதிர்பார்த்து வாழாமல், அன்பு, தன்னடக்கம், தன்னம்பிக்கை ஒருங்கே பெற்ற பாக்கியா பெஸ்ட் மருமகள் தான்!

Bagyalakshmi

சரஸ்வதி - விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் தொடரின் நாயகி சரஸ்வதி, 25 வயது கடந்த பின்னும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க மாட்டார். ஆனால் திருமணத்திற்கு பிறகு தன்னை அவமானப்படுத்தியவர்களை மனதில் வைத்து படித்து 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறுவார். அடுத்ததாக எம்.பி.ஏ படிக்கவும் ஆசைப்படுவார். சரஸ்வதி, சமையல், கேக் செய்வது, போன்ற விஷயங்களில் ஆர்வம் கொண்டவர். சுயமரியாதையுடன் வாழ துடிக்கும் சரஸ்வதி சிறந்த மருமகள் தான்!

Sarawathi

ஜெனி - பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியாவுக்கு மருமகளாக வரும் ஜெனி, பணக்கார வீட்டு பெண் என்றாலும் அந்த திமிர் கொஞ்சமும் இல்லாதவர். பாக்கியாவின் சமையல் பிஸினஸுக்கு உறுதுணையாக நிற்பவர். கௌரவத்துடன் வாழ வேண்டும் என்று சுய தொழில் செய்யும் மாமியாருக்கு ஏற்ற அன்பான மருமகள் ஜெனி.

வசு - தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வரும் வசு கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பு. ஒரே வீட்டில் வாழும் இரண்டு மருமகளுக்கு சின்ன சின்ன ஈகோ கிளாஷ் நடப்பது சகஜம். ஆனால் வசுவுக்கு சரஸ்வதியிடம் எந்த ஈகோவும் இல்லை. பணக்கார வீட்டு பெண் என்றாலும் சரஸ்வதியை தோழி போன்று நடத்துவார். சரஸ்வதிக்கு 12 ஆம் வகுப்பு பாடம் சொல்லிக் கொடுப்பார். இப்படி ஒரு மருமகள் இருந்தால் குடும்பத்தில் சந்தோஷம் நிறைந்திருக்கும்.

Jeni

எதிர் நீச்சல் - சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரின் நாயகி ஜனனி சமகால பெண்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த காலத்து பெண் பிள்ளைகள் படிப்பு, வேலை என பிஸியாக இயங்குபவர்கள். அவர்களை வீட்டுக்கும் அடைத்து வைத்து வீட்டு வேலை மட்டும் தான் செய்ய வேண்டும் என்னும் வழக்கத்தை உடைய குடும்பத்தில் மருமகள் ஆகிறார் ஜனனி. திருமணத்திற்கு பிறகு வேலைக்கு போக கூடாது, பெண் சம்பாதித்து ஆண் சாப்பிட வேண்டும் என்ற அவசியமில்லை என்று சொல்லிவிட, அவர்களுக்கு முன் தைரியமாக நான் வேலைக்கு போவேன் என்கிறார் ஜனனி. அதற்காக அவர்களை மரியாதை குறைவாக நடத்தவில்லை.

கணவன் வீட்டாரிடம் தன்மையாக, தன் கனவை புரிய வைக்க முயற்சி செய்கிறார். கணவன் மீது அன்பால் வீட்டு வேலைகளையும் முகம் சுளிக்காமல் செய்கிறார். நீ நல்லா படிச்சிருக்க நீ ஏன் ஜனனி இவ்ளோ கஷ்டப்படுற. இந்த வேலை எல்லாம் நீ செய்யணும்னு அவசியல் இல்ல’’ என்று சொல்லும் கணவரிடம், ‘’நாம சாப்பிட்ற உணவு நாம சமைக்கிறது என்ன கஷ்டம்? நம்ம வீட்ட நாம தான சுத்தமா வச்சிக்கணும். இந்த வேலை செய்யுறது எனக்கு கஷ்டம் இல்ல’’ என்று பதில் சொல்கிறார். தன்னை அடக்குமுறைக்கு ஆளாக்கும் மாமியார் வீட்டை எதிர்க்க வேண்டிய சமயத்தில் எதிர்த்து, அவர்களுக்காக விட்டுக் கொடுத்து குடும்ப அமைப்பு சிதையாமல் பார்த்து கொள்ளும் ஜனனி சிறந்த மருமகள்.

Vasu

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?