suriya  twitter
சினிமா

சூரரைப் போற்று : தேசிய விருது வென்ற படக்குழுவுக்கு குவியும் பாராட்டுகள்| பிரபலங்கள் Tweet

ஜூலை 23ம் தேதி பிறந்த நாள் காணும் நடிகர் சூர்யாவிற்கு இதை விட சிறந்த பிறந்தநாள் பரிசு கிடைத்திருக்காது என்று திரையுலகம் பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் கூறி வருகிறது.

Keerthanaa R

68வது தேசிய திரைப்பட விருதுகள் ஜூலை 22ம் தேதி அறிவிக்கப்பட்டன. மொத்தம் 10 விருதகளை தமிழ் திரைப்படங்கள் பெற்றது. அதில் சுதா கொங்கரா இயக்கிய சூரரைப் போற்று திரைப்படம் மட்டும் 5 விருதுகளை அள்ளிக் குவித்திருந்தது.

சிறந்த நடிகராக சூர்யா, சிறந்த நடிகையாக அபர்ணா பாலமுரளி, சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த பின்னணி இசை ஆகிய ஐந்து விருதுகள் கிடைத்தது.

இந்நிலையில், ஜூலை 23ம் தேதி பிறந்த நாள் காணும் நடிகர் சூர்யாவிற்கு இதை விட சிறந்த பிறந்தநாள் பரிசு கிடைத்திருக்க முடியாது என்று திரையுலகம் பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் கூறி வருகிறது. அவற்றில் சில இதோ!

நடிகர் கார்த்தி தன் டிவிட்டர் பக்கத்தில், " ஒரு சிறந்த தனித்துவமிக்க படத்திற்கு மிகப் பெரிய தேசிய அங்கீகாரம். இந்த விருது கிடைத்திட இதை விட சிறந்த தருணம் எதுவும் இல்லை" என்றும், தன் அண்ணாவிற்கு இது நீண்ட நாட்கள் காத்திருந்த அங்கீகாரம் என்றும் தெரிவித்திருந்தார்.

தனது ட்வீடில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார், நடிகை அபர்ணா பாலமுரளி மற்றூம் படக்குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்திருந்தார்

தேசிய விருதுகளை குவித்த சூரரைப் போற்று படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்த தனுஷ், "இது தமிழ் சினிமாவிற்கு மிக பெரிய நாள்.பெருமைக்கொள்கிறேன் என்றார். சூர்யா அவர்களுக்கும், என் நண்பன் ஜி வி பிரகாஷுக்கும் வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டிருந்தார்

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். #68thNationalFilmAwards-இல் விருதுகளைக் குவித்துத் தமிழ் திரையுலகுக்குப் பெருமை சேர்த்துள்ள சூர்யா, சுதா கொங்கரா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட சூரரைப் போற்று படக்குழுவினருக்கு" பாராட்டுகளை சொல்லியிருந்தார்

இயக்குநர் பாண்டிராஜ் தன் டிவிட்டர் பக்கத்தில் "எப்படிப்பட்ட பிறந்தநாள் பரிசு இது? நீங்கள் இதற்கு மிகத் தகுதியானவர்" என்று பதிவிட்டிருந்தார்

வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்த நடிகை ரம்யாவின் ட்வீட்

இயக்குநர், நடிகர் சசிகுமார்

நடிகை கீர்த்தி சுரேஷின் ட்வீட்

நடிகர் மாதவன்!

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?