Inception  Twitter
சினிமா

Inception : இது தான் நோலன் பயன்படுத்திய Plot Map ஆ? - வைரல் புகைப்படம்

Keerthanaa R

இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் Inception திரைப்படத்திற்காக அவர் பயன்படுத்திய Plot Map வைரலாகி வருகிறது.

சினிமாவும் வாழ்க்கையும்:


சினிமா என்பது நம் எல்லார் வாழ்வின் ஒரு அங்கமாகி விட்டது. இனம், மொழி, கலாச்சாரம் என்பதையெல்லாம் தாண்டி, நாம் உலக சினிமாவை அதிகமாக கொண்டாடத் துவங்கியிருக்கிறோம்.

இதற்கு முக்கிய காரணம், நிஜ வாழ்வில் சாத்தியமில்லாத சில எல்லைகளை, திரையுலகம் நம்மைக் கடக்கவைத்துவிடுகிறது என்பது தான். சினிமாவை "An Escape from the Reality " என்று தான் விமர்சிக்கிறார்கள்.

இவற்றை நிரூபிக்கும் விதமாகப் பல திரைப்படங்கள் வந்துள்ளது. அதில் தனி இடம் பிடித்த திரைப்படம், ஹாலிவுட்டில் லியனார்டோ டி கேப்ரியோ நடிப்பில், கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய இன்செப்ஷன் திரைப்படம்.இதன் non-linear

Inception

Inception:

2010ல் வெளியான இந்த திரைப்படம், இதன் வித்தியாசமான கதைக்களத்திற்காக மிகவும் பேசப்பட்டது. ஒரு கும்பல் ஒன்றிணைந்து, ஒரு மனிதனின் மூளைக்குள் சென்று தகவலைத் திருடுவது தான் கதையின் களம். விஞ்ஞானத்தின் மூலம் மனிதனை அதற்கு கட்டுப்படும் கருவியாக்கிவிடலாம் என்பதை உணர்த்தும் விதமாக அமைந்த இந்த படம், வெளிவந்த காலக்கட்டத்தில் பிரமிப்பாக இருந்தது.


ஒரு முறை மட்டுமே பார்க்கும் யாருக்கும் இந்த படம் புரிய வாய்ப்பில்லை. அதே சமயம், எத்தனை முறை திரும்பப் பார்த்தாலும், சிறிதும் கவனம் சிதறினால், நாம் கதையுடன் ஒன்ற வாய்ப்புகள் குறைவு தான்.

இத்திரைப்படத்தின் climax இன்றும் புரியாத புதிராகத் தான் இருக்கிறது. அதை பற்றிய விவாதங்கள் பல நேரங்களில் இணையத்தில் சூடுபிடிக்கும்.

Totem

மூளைக்குள் சென்று எப்படி தகவலைத் திருட முடியும்?

இதற்கு இந்த கும்பல் பயன்படுத்தும் கருவி, ஒரு மனிதனின் கனவு உலகம். இவர்கள் யாரிடம் இருந்து தகவலை எடுக்க விரும்புகிறார்களோ, அவர்களது ஆழ்மனத்தின் உள்ளே ஊடுருவி அவர்களை தங்களின் கட்டுக்குள் வரவைத்து காரியத்தைச் சாதித்துக்கொள்வார்கள். அதாவது, மனதில் நாம் செய்துவைத்துள்ள முடிவை இவர்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைப்பார்கள்.

இந்த கனவுக்குள் செல்பவர்கள் எல்லோருக்கும் ஒரு கருவி கையில் இருக்கும். அது தான் இவர்களை நிஜ உலகத்திலிருந்து, கனவு உலகத்தை வேறுபடுத்த உதவும். அதை டோட்டம் (Totem) என்றழைப்பார்கள்.

இந்த கும்பலில் இருக்கும் ஒவ்வொருவரும், இந்த கனவு உலகின் ஒவ்வொரு தளத்தில் (Stage)ல் உள்நுழைவர். அப்போது, அது கனவுக்குள் கனவாகத் தோற்றம் கொள்ளும். நிஜ உலகத்தில், உறங்கிக்கொண்டிருக்கும் நபருக்கு வெளியிலிருந்து ஏதேனும் தடங்கலோ, ஆபத்தோ நேர்ந்தால், கனவு உலகத்தில் அது பிரதிபலிக்கும். இதனால், அவர்கள் நினைத்த காரியத்தில் மாற்றம் ஏற்படும்.


இப்படிப்பட்ட திரில்லிங்கான கதையை, அதற்கான களத்தைப் படத்தின் இயக்குநர் நோலன் எப்படி சாத்தியப்படுத்தியிருப்பார் என்பது இன்றும் ஒரு ஆச்சரியமே.

Plot Map

இன்செப்ஷனின் Plot Map:

அதற்கு பதிலளிக்கும் விதமாக இணையத்தில் பரவி வருகிறது, நோலன் கைப்பட எழுதிய கதையின் வரைபடம்
ஜூலியன் ஷபிரோ என்ற நபர் தான் இதை தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இவர் ஒரு எழுத்தாளர் ஆவர். "என்னைப் போலவே திரைப்பட மேதாவிகளுக்காக இந்த அரிதான கண்டுபிடிப்பு. இது கிறிஸ்டோபர் நோலன் இன்செப்ஷன் திரைப்படத்திற்காகக் கைப்பட எழுதிய கதையின் வரைபடம்" என்று தலைப்பிட்டுப் பகிர்ந்திருந்தார்.
இந்த பதிவிற்கு 16,000 லைக்குகள், 2500 ரீட்வீட்களும் வந்துள்ளன. இணையவாசிகள் ஒரு புறம் இதைக் கொண்டாட, இன்னொரு புறம் நகைச்சுவையான, சிந்திக்கவைக்கக்கூடிய கமென்ட்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர்.

இணையத்தின் ரியாக்ஷன்:

ஒரு பயனர் அந்த வரைபடத்தைப் பார்த்துவிட்டு, "நல்ல உணவகத்திற்கு செல்லும் வழியை இதில் என்னால் கண்டறிய முடியவில்லை' என்று சொல்லியிருந்தார்.

இன்னொருவர், பார்த்தால் கொஞ்சம் கூட புரியாத ஒரு வரைபடத்தைப் பகிர்ந்து, "அரிதிலும் அரிது. நோலனின் TENET திரைப்படத்திற்கான கதை வரைபடம்" என்று பகிர்ந்திருந்தார்.


"தி நோலன் வேரியேஷன்ஸ்: தி மூவீஸ், மிஸ்டெரீஸ் அண்ட் மார்வெல்ஸ் ஆஃப் கிறிஸ்டோபர் நோலன்" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதை எழுதியது டாம் ஷோன் என்ற நபர்.


இப்போது வைரலாகி வருகிறது இந்த புகைப்படம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?