Roshini Priyan & Vishnu Devi

 

Newssense

சினிமா

பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி : ``இவருக்கு பதில் இவர்’ - தொடரும் சீரியல் குழப்பங்கள்

NewsSense Editorial Team

இயக்குநர் உடன் பிரச்சனை, சினிமா வாய்ப்பு, யூடியூப் சேனல் வருமானம் போன்ற காரணங்களால் சீரியல் பிரபலங்கள் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருக்கும் சீரியல்கள் என்றாலும் சாதாரணமாக விலகி விடுகிறார்கள். அப்படியான சில மாற்றங்கள் பற்றிய தொகுப்பு தான் இந்த கட்டுரை.

Roshini Priyan

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியல் கதை களம் சூடுபிடிக்கத் தொடங்கிய சமயத்தில் நாயகி ரோஷினி சீரியலை விட்டு விலகுவதாக தெரிவித்தார். சினிமா வாய்ப்புகளுக்காக சீரியலில் இருந்து விலகிய ரோஷினி ஹரிப்ரியன் குக் வித் கோமாளியில் பங்கு பெற்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.  கண்ணம்மாவாக ரசிகர்களால் கொண்டாட்டப்பட்ட ரோஷினி ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதுவரை அவர் எந்த இண்டர்வியூவும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவரை தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து அகிலன் விலகினார். அவரை தொடர்ந்து அண்மையில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஸ்வீட்டியும் விலகிவிட்டார். தன் ரோலுக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதாலும், வேறு சேனலில் சீரியல் லீடாக நடிக்க வாய்ப்பு வந்ததாலும் சீரியலில் இருந்து விலகிவிட்டதாக ஸ்வீட்டி தெரிவித்தார்.

Munna

வைதேகி காத்திருந்தாள்

பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட `வைதேகி காத்திருந்தாள்’ சீரியல் விறுவிறுப்பான கதைக்களத்துடன் நகர்ந்து கொண்டிருந்த சமயத்தில் நாயகன் பிரஜின் சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். வழக்கம் போல இவரும் சினிமா வாய்ப்பு வந்ததால் விலகியதாக குறிப்பிட்டார். ஆனால் சில தினங்களில் மீண்டும் யாரையோ குறிப்பிட்டு விமர்சித்து தன் இன்ஸ்டாவில் பதிவு செய்திருந்தார். அந்த பதிவு சீரியல் குழுவில் ஏதோ சலசலப்பு ஏற்பட்டுள்ளதை உறுதி செய்தது. பிரஜினுக்கு பதில் நடிகர் முன்னா `வைதேகி காத்திருந்தாள்’ சீரியலில் நாயகனாக கமிட் ஆனதாக தகவல் வெளியானது. ஆனால் அவரின் போதாத நேரம் அந்த சீரியலை நிறுத்திவிட்டனர். முன்னா நாயகனாக நடித்து வந்த `ராஜ பார்வை’ சீரியலும் பாதியில் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

சன் டிவியின்  பிரபல நெடுந்தொடர் .சந்திரலேகா’. இந்த சீரியலின் லீட் ரோலில் நடித்து வந்த அருண் ராஜன் தேதி பிரச்னைகளால், சீரியலை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.  அவருக்கு பதில் சின்னத்திரை நடிகர் அஸ்வின் குமார் கமிட் ஆகியிருக்கிறார்.

Arun Kumar Rajan

சந்திரலேகா

சன் டிவியின் பிரபல நெடுந்தொடர் .சந்திரலேகா’. இந்த சீரியலின் லீட் ரோலில் நடித்து வந்த அருண் ராஜன் தேதி பிரச்னைகளால், சீரியலை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு பதில் சின்னத்திரை நடிகர் அஸ்வின் குமார் கமிட் ஆகியிருக்கிறார்.

Vikash Sambath

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியல், கதைகளம், விவாகரத்து பஞ்சாயத்தால் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. இந்த சூழலில் சீரியலின் முக்கிய நடிகர் ஆர்யன் (செழியன் கதாபாத்திரம்) சீரியலை விட்டு விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு பதில் நடிகர் விகாஷ் சம்பத் சீரியலில் கமிட் ஆகி இருக்கிறாராம். ஆர்யன் தன் மனைவி ஷபானா உடன் இணைந்து புதிய சீரியலில் நடிக்க உள்ளதாக வதந்திகள் வந்த வண்ணம் உள்ளன. உண்மை என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?