Farina Azad Twitter
சினிமா

அபி டெய்லர் சீரியலில் சர்ச்சை - ஃபரீனா சீரியலை விட்டு விலக காரணம் என்ன? 

ரேஷ்மாவுக்கு இணையாக ஃபரீனாவுக்கு சீரியலில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால், ஈகோ கிளாஷ் ஆகி ஃபரீனா டீசண்டாக விலகிவிட்டதாக ஒரு கதை சொல்லப்படுகிறது.

ஆதினி

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ’அபி டெய்லர்’ சீரியல் 200 எபிசோடுகளைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில், சீரியலின் முழு பலமாக இருந்த ஃபரீனா  திடீரென மாற்றப்பட்டுள்ளார்.

பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக மிரட்டி வரும் ஃபரீனா, அபி டெய்லர் என்னும் தொடரில் நாயகிக்கு சரிசமமான முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இன்னும் சொல்ல போனால் அவர் நடித்து வரும் பவானி என்னும் ரோல் தான் சீரியலின் அனைத்து புரோமோக்களிலும் வருகிறது. நாயகி ரேஷ்மாவா, ஃபரீனாவா என்று ரசிகர்கள் சந்தேகப்படும் அளவுக்கு பவானி ரோலுக்கு வெயிட்டேஜ் அதிகம்.

Farina Azad - Abhi tailor

குழந்தை பிறந்தவுடன் ஃபரீனாவின் அழகு மேலும் மெருகேறி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஆன் ஸ்கிரீனில் தாவணியில்  அம்சமாக இருக்கிறார். ஆனால் தற்போது திடீரென பவானி கதாபாத்திரத்தில் நான் நடிக்க போவதில்லை என்று ஃபரீனா  தன் இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டிருக்கிறார். மேலும் ஃபரீனாவுக்கு பதில் கீர்த்தி என்பவர் பவானி கதாபாத்திரத்தில் நடிக்க போகிறாராம்.

Farina Azad

விஜய் டிவியில் பாதியில் நின்று போன ’ராஜ பார்வை’ சீரியலில் நடித்த கீர்த்தி தான் இனி பவானி. இதனால் ரசிகர்கள் செம அப்செட். பவானி என்னும் கெத்தான கதாபாத்திரத்துக்கு ஃபரீனா தான் சரியான ஆள் என்று ரசிகர்கள் புலம்புகின்றனர்.

இதனிடையே ரேஷ்மாவுக்கு இணையாக ஃபரீனாவுக்கு சீரியலில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால், ஈகோ கிளாஷ் ஆகி ஃபரீனா டீசண்டாக விலகிவிட்டதாக ஒரு கதை சொல்லப்படுகிறது. மற்றொரு புறம் சீரியல் நாயகி ரேஷ்மாவும் விரைவில் சீரியலை விட்டு விலகி, ஜீ தமிழில் புதிய சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எது உண்மை என்று தெரியவில்லை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?