Dhoni Twitter
சினிமா

Dhoni : "Play-off போகலைன்னா உலகம் அழிஞ்சிடாது" வெற்றி குறித்து தோனி கூறியது என்ன?

நேற்றைய போட்டியில் நல்ல ரன்ரேட்டுடன் வெற்றி கிடைத்தது. இனி அனைத்து ஆட்டங்களையும் இது போல வெற்றி பெற வேண்டும். ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகளில் ஏதாவது ஒன்றாவது இனி விளையாடும் அனைத்து போட்டிகளிலும் தோல்வியைத் தழுவ வேண்டும். என்பது தான் அந்த கணக்கு.

Antony Ajay R

சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று சிறப்பாக நடந்து முடிந்தது. பேட்ஸ் மேன்களும் சரி பௌளர்களும் சரி தங்களது பங்கைச் சிறப்பாக நிறைவேற்றிக்கொடுக்க 92 ரன்கள் வித்தியாசத்தில் அமோகமாக வென்றிருந்தது சென்னை அணி!

கேப்டன் தோனி நேற்று அதிரடியாக 8 பந்துகளில் 21 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். டாஸ் வென்றால் பௌலிங் எடுக்க நினைத்திருந்த தோனி டாஸில் தோற்றாலும் அணி வீரர்களின் அசாத்திய திறமையால் மேட்சில் வென்றுகாட்டியிருக்கிறார். ஆகா… இந்த வெற்றி ஆரம்பத்திலேயே கிடைத்திருந்தால்… என உறங்கும் போது ஏக்கத்துடனே சென்ற ரசிகர்கள் பிளே ஆஃப் வாய்ப்புகள் குறித்து மனக் கணக்கிட்டிருப்பதையும் மறக்க முடியாது.

நேற்றைய போட்டியில் நல்ல ரன்ரேட்டுடன் வெற்றி கிடைத்தது. இனி அனைத்து ஆட்டங்களையும் இது போல வெற்றி பெற வேண்டும். ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகளில் ஏதாவது ஒன்றாவது இனி விளையாடும் அனைத்து போட்டிகளிலும் தோல்வியைத் தழுவ வேண்டும். என்பது தான் அந்த கணக்கு.

ஆனால் தோனி எண்கள், புள்ளிகள் குறித்த சிந்தனைகளின்றி நிம்மதியாக உறங்கியிருப்பார் என்றுதான் தோன்றுகிறது. ஏன் எனப் புரிந்து கொள்ள தோனியின் நேற்றைய பேச்சிலிருந்து சில வரிகள் இங்கே…

தோனி, “இது ஒரு பெர்ஃபெக்டான வெற்றி, ஆரம்பத்திலேயே இந்த வெற்றி கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். டாஸ் வென்றால் பந்து வீச தான் நினைத்தேன். ஆனால் பேட்டிங் தான் செய்தோம். அதிக ரன்கள் குவித்ததால் பந்து வீச்சாளர்கள் பாதுகாப்பாக உணர முடிந்தது. டெல்லி அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்திய முகேஷ் சௌத்ரி, ஷிம்ரஜித் சிங் இருவருக்கும் திறமை இருக்கிறது. ஆனால் அனுபவம் அதிக போட்டிகளில் விளையாடினால் தான் வரும். டீ 20 ஐ பொறுத்தவரை எந்த பந்துகளைப் போடக் கூடாது என்பதில் தான் அதிக கவனம் வேண்டும்”

தோனி

8 பந்துகளில் 21 ரன்கள் குவித்தது குறித்து தோனி, “ எனக்கு ஆரம்பித்த உடனே பெரிய ஷாட்களை ஆடி ரன் குவிக்க பிடிக்காது. ஆனால் கொஞ்ச பந்துகளே இருந்தது. அந்த நேரத்தில் 2 பந்துகளில் 2 ரன்கள் எடுப்பது வீண்” என்றார்.

மேலும் பிளே ஆஃப் குறித்துப் பேசிய தோனி, “ பிளே ஆஃப் குறித்து நாங்கள் சிந்திக்கவில்லை. பிளே ஆஃப், நெட் ரன்ரேட் எல்லாம் அழுத்தத்தைத் தான் தரும். நாங்கள் மகிழ்ச்சியாக விளையாடுகிறோம். அதுமட்டுமல்ல எனக்குக் கணக்கு சுத்தமா வராது. நாங்கள் பிளே ஆஃப் சென்றால் மகிழ்ச்சி தான் இல்லை என்றால் உலகம் ஒன்றும் அழிந்து விடாது” எனப் பேசினார் தோனி.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?