ரஸ்னீஷ் காய் இயக்கத்தில் கங்கனா ரனாவத்தின் நடிப்பில் கடந்த மே 20 ஆம் தேதி வெளியான படம் ‘தாகத் ’.இந்தப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாத நிலையில் படுதோல்வியை சந்தித்துள்ளது.
பொதுவாக ஒரு படம் திரையங்குகளில் வெளியாவதற்கு முன்னரே அதன் சாட்டிலைட் மற்றும் OTT உரிமைகளை தயாரிப்பாளர்கள் விற்பனை செய்துவிடுவார்கள்.Kangana Ranaut
ஆனால் ‘தாகத்’ திரைப்படத்தைத் திரையரங்குகளில் வெளியான பின்னர் பெருந்தொகைக்கு விற்பனை செய்யலாம் எனப் படக்குழு திட்டமிட்டு இருந்தனர். ஆனால் படம் எதிர்பார்த்த வசூலை ஈட்டவில்லை.
இதனால் எந்த நிறுவனமும் ‘தாகத்’ படத்தை ஒளிபரப்புவதற்கான உரிமையை வாங்க முன்வரவில்லை. சுமார் 90 கோடி மதிப்பில் தயாரான இந்த திரைப்படம், வெறும் 3 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால்‘தாகத்’ திரைப்பட தயாரிப்பாளர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
இந்த நிலையில் 'தாகத்' திரைப்படம் வெளியாகி 8-வது நாள் வெறும் 4,420 ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி நாடு முழுவதும் இந்த படத்திற்கு 20 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனையானதாகவும், பல திரையரங்குகளில் படத்தைத் தூக்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust