கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்திருந்த தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தம்பதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தங்கள் 18 வருட திருமணத்தை முறித்துகொள்வதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்தனர் தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
கடந்த 2004ல் நடிகர் ரஜினிகாந்தின் மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யாவை மணந்தார் நடிகர் தனுஷ். இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என்ற இரு மகன்கள் உள்ளனர்.
தங்களது பிரிவை குறித்த வேறெந்த தகவலும் இவர்கள் இருவர் தரப்பிலிருந்தும் வெளியாகாத நிலையில், இரு குடும்பத்தாரும் மீண்டும் இவர்களை சேர்த்துவைக்கும் முயற்சியில் இருந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் அவர்களது மகனின் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் சேர்ந்து பங்கேற்றது, பிரிந்த ஜோடி மீண்டும் இணையப்போவதாக பேச்சுக்கள் எழுந்தன.
இந்நிலையில், தற்போது மீண்டும் 9 மாதங்கள் கழித்து தனுஷ் ஐஸ்வர்யா தம்பதி இணையப்போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இருவரும் விவாகரத்தை நிலுவையில் வைத்திருப்பதாக நியூஸ்18 தளம் தெரிவிக்கிறது. மேலும் இருவருக்கும் இடையில் இருக்கும் கருத்துவேறுபாடுகளை களையவும், மீண்டும் இணைந்து வாழ முயற்சிக்கப்போவதாகவும் நியூஸ் 18 தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
இது குறித்த எந்த அதிகாராப்பூர்வ அறிவிப்பும் தனுஷ் ஐஸ்வர்யா தரப்பிலிருந்து வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust