ஆலியா பட் Twitter
சினிமா

RRR : ராஜமௌலியை Unfollow செய்தாரா ஆலியாபட்?

RRR படத்தைப் பார்த்த பிறகு அதன் புரொமோஷன்களில் ஆலியா பெரிய அளவு ஆர்வம் காட்டாமல் இருந்தார். முதல் முறை பட வெளியீடு தள்ளிப்போன பிறகு ஒரே ஒரு பெரிய நிகழ்ச்சியில் மட்டுமே கலந்துகொண்டிருந்தார்.

Antony Ajay R


எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், ஆலியாபட், ஷ்ரேயா சரண், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது ஆர்ஆர்ஆர் திரைப்படம்.

சுதந்திரப் போராட்ட வீரர்களான கொமரம் பீம் மற்றும் அல்லூரி சீத்தாராம ராஜு ஆகியோரைத் தழுவி எடுக்கப்பட்ட RRR திரைப்படத்தில் ஆலியாபட் -க்கு மிகக் குறைவான ஸ்க்ரீன் ஸ்பேஸ் மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தது. அவரைக் கொண்டு ஷூட் செய்த பல காட்சிகள் நீக்கப்பட்டதால் மனக் கசப்புடன் இருந்தார் ஆலியா.

RRR Crew

சமீபத்தில் ஆலியாபட் பெண்மைய்யக் கதையான கங்குபாயில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களைப் பெற்றார். பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக உருவாகும் பிரஹ்மஸ்த்ரா படத்திலும் நடித்து வருகிறார். பாலிவுட்டில் உச்சத்தில் இருக்கும் ஆலியாபட் தென்னிந்திய சினிமாவில் RRR மூலம் தான் அறிமுகம் செய்யப்பட்டார். ஆனால் அறிமுக படமே அவருக்குத் திருப்தி இல்லாததால் இயக்குநர் ராஜமௌலியை சமுக வலைத்தளங்களில் அன்பாலோ செய்திருக்கிறார் என்று கூறப்பட்டது. அது வெறும் வதந்திதான். ஆனால் RRR தொடர்பான பதிவுகளை நீக்கியுள்ளார்.

RRR படத்தைப் பார்த்த பிறகு அதன் புரொமோஷன்களில் ஆலியா பெரிய அளவு ஆர்வம் காட்டாமல் இருந்தார். முதல் முறை பட வெளியீடு தள்ளிப்போன பிறகு ஒரே ஒரு பெரிய நிகழ்ச்சியில் மட்டுமே கலந்துகொண்டிருந்தார்.

இதற்கிடையில் ஒரே நாளில் 223 கோடி மூன்று நாட்களில் 500 கோடி என அடுத்தடுத்த சாதனைகளைப் படைத்துவருகிறது RRR. ஆனாலும் பெண் கதாபாத்திரங்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே தந்திருக்கிறது. ஆலியாபட் நிலையே இப்படியென்றால் ஷ்ரேயா ரசிகர் மன்றம் நடத்திவரும் 90ஸ் கிட்ஸ்களைப் பார்க்கப் பாவமாகத் தான் இருக்கிறது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?