தேவர் மகன் ’இசக்கி’ தான் மாமன்னன்- வடிவேலு கதாபாத்திரம் குறித்து பேசிய மாரி செல்வராஜ் ட்விட்டர்
சினிமா

தேவர் மகன் ’இசக்கி’ தான் மாமன்னன்- வடிவேலு கதாபாத்திரம் குறித்து பேசிய மாரி செல்வராஜ்

Keerthanaa R

அன்று தேவர் மகன் திரைப்படத்தில் வந்த இசக்கி தான் இன்று மாமன்னன் எனக் கூறியிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

மாரி செல்வராஜின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபகத் பாசில் நடிக்கும் திரைப்படம் மாமன்னன். இந்த திரைப்படத்தை அமைச்சர் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தில், நடிகர் வடிவேலுவுக்கு வலுவான கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். இப்படத்தில் ஒரு பாடலையும் நடிகர் வடிவேலு பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது

நேற்று மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர் வடிவேலுவின் கதாபாத்திரத்தின் பின்கதையை கூறியிருந்தார்.

“மாமன்னன் வடிவேலு கதாபாத்திரம் தான் என் அப்பா. அவருக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது. தேவர் மகன் படம் எனது வாழ்வில் மிக முக்கியமான படம், எனக்கு மனப்பிறழ்வை ஏற்படுத்திய படம். அதைப் பார்த்து தான் மாமன்னன் எடுத்தேன்”

தேவர் மகன் படத்தில் என் அப்பா இருந்தால் எப்படியிருக்கும் என்பது தான் மாமன்னன் படம். தேவர் மகனில் வந்த இசக்கி மாமன்னனாக மாறினால் எப்படியிருக்கும் என்ற யோசனை. அந்த இசக்கி தான் இன்று மாமன்னன்” என்று கூறியுள்ளார் மாரி செல்வராஜ்

மாரி செல்வராஜ் - மாமன்னன்

வரும் ஜூன் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது மாமன்னன் திரைப்படம்.

நேற்று நடந்த இசைவெளியீட்டு விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், இயக்குநர் பா ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு படம் நடிக்கப்போவதில்லை, அதை மக்கள் தான் முடிவு செய்யவேண்டும் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?