DJ Black Vs Pooja : "ஏன்யா என்னை டூப்ளிகேட் காதலுக்குள்ள மாட்டி விடுறீங்க" - கலாய்த்த TR  Twitter
சினிமா

DJ Black Vs Pooja : "ஏன்யா என்னை டூப்ளிகேட் காதலுக்குள்ள மாட்டி விடுறீங்க" - கலாய்த்த TR

Priyadharshini R

சின்னத்திரையில் பிரபலமான இசை கலைஞராக வலம் வருபவர் தான் டிஜே பிளாக்.

ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் லைவாக கவுண்டர் அடிப்பது, செட்டில் இருப்பவர்களுக்கு பாடலிலே பதில் சொல்வது, டயலாக்கள் மூலம் கலாய்ப்பது என குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

அதிலும் பாடல் வழியாக பெண்களுக்கு பிக் அப் லைன் போட்டு 2கே கிட்ஸ்களையும் கவர்ந்தார் டிஜே பிளாக்.

சூப்பர் சிங்கர் 9 நிகழ்ச்சியில் பாட வரும் போட்டியாளர் பூஜா என்ற பெண்ணுக்கு பல பல பாடல்களை தட்டி விடுவதில் வழக்கமாகக் கொண்டுள்ளவர் டிஜே பிளாக்.

DJ Black

அது தொடர்பான வீடியோக்கள் இன்ஸ்டா, பேஸ்புக் போன்ற சமூகவலை தளங்களில் வைரலானது.

அது மட்டுமில்லாமல் அந்த வீடியோக்களை சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் அழகாக எடிட் செய்து பகிர்ந்து வருவார்கள்.

இந்த நிலையில் கடந்த வாரம் அந்த நிகழ்ச்சியில், STR ரவுண்ட் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் கலந்துகொண்டார். வழக்கம்போல பூஜா பாட வரும்போது 'என் மனசில் நீயே தானா?' என டி.ஆர் படத்தின் பாடலையே DJ பிளாக் போடுகிறார்.

இது பற்றி தொகுப்பாளர் பிரியங்கா பேச, அப்போது டி.ஆர், "பொண்ணுக்கிட்ட காதலை சொன்னா தான் காதல்னு இல்லம்மா. ஒரு பெண்ணுக்காக நின்னாவே காதல் தான்" என்கிறார்.

அப்போது, பிரியங்கா DJ பிளாக் பற்றி அவரிடம் சொல்கிறார். அந்த நேரம் பார்த்து விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் வரும் 'உலகத்தில் எவ்வளவோ பொண்ணு இருந்தும்' என்ற வசனத்தில் ஜெஸ்ஸிக்கு பதிலாக பூஜா என்ற வார்த்தையை சேர்த்து ஒலிக்க விடுகிறார் DJ.

அதற்கு பதிலளித்த டிஆர், பாட்டு வரைக்கும் ஓக்கே உன்னுடைய Thought தான் இடிக்கிது என்றார்.

”அதுக்கு பிறகு உனக்கு அந்த பொண்ண புடிக்கிது, அந்த பெண்ணுக்கு உன்ன பிடிக்குமானு கேட்டிருக்கியா?” என்கிறார்.

அதுக்கு டிஆர் டையலாக்கையே பிளே செய்து அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கினார் DJ.

அப்படி என்ன டையலாக் அது?

இதனை கேட்ட டி ஆர்,"ஏன்யா என்னை டூப்ளிகேட் காதலுக்குள்ள மாட்டி விடுறிங்க" என கலகலப்புடன் சொல்கிறார். இவற்றை புன்னைகையுடன் பார்த்தபடி நிற்கிறார் பூஜா.

இந்த வீடியோ தான் இணையத்தளத்தில் 2 நாட்களாக பல பல விதமான எடிட்டுகளில் வலம் வருகிறது.


முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?