15 Years of Santosh Subramaniam: “சந்தோஷ் சுப்பிரமணியம்” படம் உருவான கதை தெரியுமா? Twitter
சினிமா

15 Years of Santosh Subramaniam: “சந்தோஷ் சுப்பிரமணியம்” படம் உருவான கதை தெரியுமா?

இளசுகளின் மனசை கொள்ளையடித்த “சந்தோஷ் சுப்பிரமணியம்” படம் வெளியாகி இன்றோடு 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த படம் உருவான விதம் குறித்து இங்கே தெரிந்துக் கொள்ளலாம்.

Priyadharshini R

மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த 2008 -ல் வெளியான படம் “சந்தோஷ் சுப்பிரமணியம்”.

இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஜெனிலியா தங்களின் யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்திருந்தனர்.

இளசுகளின் மனசை கொள்ளையடித்த “சந்தோஷ் சுப்பிரமணியம்” படம் வெளியாகி இன்றோடு 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த படம் உருவான விதம் குறித்து இங்கே தெரிந்துக் கொள்ளலாம்.

ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு எண்டரி கொடுத்தார் ரவி. இப்படத்தை அவரது அண்ணன் ராஜா இயக்கியிருந்தார்.

இது ஒரு தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும். தொடர்ந்து எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும் என அடுத்தடுத்து இதே கூட்டணியில் ஹிட் கொடுத்த இவர்கள் “சந்தோஷ் சுப்பிரமணியம்” படத்திலும் இணைந்தார்கள்.

இன்று பல மீம்களில் சந்தோஷ் கதாப்பாத்திரமும், ஹாசினியாக நடித்த ஜெனியா கதாப்பாத்திரமும், உலா வருகிறது.

சந்தோஷ் சுப்பிரமணியம் உருவான கதை

பொம்மரிலு என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் தான் சந்தோஷ் சுப்பிரமணியம் படம். இந்த படத்தை இயக்கிய பாஸ்கரும், ராஜாவும் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் நண்பர்கள்.

சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தை நீதான் ரீமேக் செய்ய வேண்டும் என பொம்மரீலு படத்தின் ரீமேக் உரிமையை பெற்றிருந்த நடிகர் பிரகாஷ்ராஜ் தான் ராஜாவிடம் கேட்டுள்ளார்.

அவர் சில பிரபலங்களை இந்த படத்திற்காக ராஜாவிடம் பரிந்துரைத்துள்ளார். ஆனாலும் ரவி தான் இந்த படத்திற்கு சரியாக இருக்கும் என எண்ணியுள்ளார்.

அப்போது ஜெயம் ரவி ஏஜிஎஸ் நிறுவனத்தில் படம் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார். அந்நிறுவனத்திடம் ராஜா பேச, பிரகாஷ்ராஜிடம் இருந்து படத்தின் ரீமேக் உரிமை ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு கை மாறியுள்ளது.

அப்போவே முடிவு செய்துவிட்டேன்

நேர்காணல் ஒன்றில் இப்படம் பற்றி பேசிய ராஜா,

ஒரிஜினல் படத்தோட ஒப்பிடுகையில் தமிழில் காட்சிகளை இன்னும் உணர்வுப்பூர்வமா எடுக்கணும்ன்னு நினைச்சேன்.

அந்த அளவுக்கு பார்த்து பார்த்து சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தை இயக்குனேன் என தெரிவித்துள்ளார்.

கிளைமேக்ஸ் காட்சி 14 பக்க வசனம் இருந்தது. அதனை ஒரே டேக்ல பேசி ரவி அசத்தினான். ரவி நிஜமாகவே எமோஷனலாகிட்டான்.

அந்நேரத்தில் எனக்கு முன்னாடி ரவியை பிரகாஷ்ராஜ் இரண்டு நிமிஷமா கட்டிப்பிடிச்சிகிட்டார்.

ஆரம்பத்திலேயே இப்படத்தில் ஹீரோயின் ஜெனிலியா தான் என முடிவு செய்துவிட்டேன் என அந்த நேர்காணலில் ராஜா தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?