meena
meena Twitter
சினிமா

"என் கணவர் மரணம்" குறித்து அவதூறு பரப்ப வேண்டாம் - நடிகை மீனா வேண்டுகோள்

Priyadharshini R

தமிழ் சினிமாவில் ஒரு காலக் கட்டத்தில் கொடிகட்டிப் பறந்தவர் நடிகை மீனா. இவரது கணவர் வித்யா சாகர் கொரோனாவிற்கு பிந்தைய பக்கவிளைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

நுரையீரல் மற்றும் இருதயம் ஏற்கெனவே அவருக்குச் செயலிழந்துவிட்ட நிலையில், வித்யா சாகர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். எக்மோ கருவியில் உயிர் வாழ்ந்து வந்த அவர், சிகிச்சை பலனின்றி ஜூன் 28 அன்று இரவு உயிரிழந்தார்.

நடிகை மீனா கணவர் வித்யாசாகர்

இதற்கிடையில் இவரின் மரணம் குறித்து இணையதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வந்தன. இதற்குப் பதிலளிக்கும் விதமாக நடிகை மீனா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் “எனது அன்புக் கணவர் வித்யா சாகரின் இழப்பால் நான் மிகவும் வருத்தத்தில் இருக்கிறேன்.

அனைத்து ஊடகங்களும் எங்களின் தனியுரிமைக்கு மதிப்பளித்து, இந்தச் சூழலுக்கு அனுதாபம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். என் கணவரின் மரணம் குறித்து தவறான தகவல்களை ஒளிபரப்புவதை நிறுத்துங்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த இக்கட்டான நேரத்தில், எங்கள் குடும்பத்திற்கு உதவிய நல்ல உள்ளங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்களால் இயன்றவரை முயற்சித்த அனைத்து மருத்துவக் குழுவினருக்கும், முதலமைச்சர், சுகாதார அமைச்சர், ராதாகிருஷ்ணன், சக ஊழியர்கள், நண்பர்கள், குடும்பத்தினர், ஊடகங்கள் மற்றும் அன்பையும் பிரார்த்தனைகளையும் அனுப்பிய என் அன்பு ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?

உலகில் மிகக் குறைவாகப் பார்வையிடப்பட்ட நாடுகள் இவைதான்!