மஞ்சு வாரியர் Twitter
சினிமா

Manju Warrier : கடத்தப்பட்டாரா அசுரன் பட நடிகை? - இயக்குநர் பதிவால் பரபரப்பு

Priyadharshini R

மஞ்சு வாரியரின் உயிருக்கு ஆபத்து என இயக்குநர் சணல் குமார் சசிதரன் சமூகவலைத்தளங்களில் அளித்துள்ள புகார் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மஞ்சு வாரியர். இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான அசுரன் திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலன் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்நிலையில் மஞ்சு வாரியரின் உயிருக்கு ஆபத்து உள்ளது என இயக்குநர் சணல் குமார் சசிதரன் சமூகவலைத்தளங்களில் குறிப்பிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியரின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது, அவரை சிலர் காவலில் வைத்திருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு நான்கு நாட்களாகிறது. ஆனால் மஞ்சு வாரியரோ, அவருடன் சம்பந்தப்பட்ட வேறு யாரோ இதுவரை பதிலளிக்கவில்லை.

மஞ்சு வாரியரின் மௌனம் என் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. மலையாளத் திரையுலகில் பாலின சமத்துவத்திற்காகச் செயல்படும் அமைப்பான wcc- க்கு மின்னஞ்சல் அனுப்பினேன். அவர்களும் இவ்விவகாரத்தில் தொடர்ந்து அமைதியாக இருந்து வருகின்றனர்.

இந்த பிரச்சனையின் தீவிரத்தை புரிந்துக்கொள்ளாமல், பலரும் நகைச்சுவையாகக் கடந்து செல்கின்றனர், நான் எழுப்பியுள்ள பிரச்சினை தேசிய அளவில் புகழ் பெற்ற ஒரு திரைப்பட நடிகையின் வாழ்க்கை மற்றும் சுதந்திரம் பற்றியது என்பதால், தேசிய ஊடகங்கள் இந்த பிரச்சினையைத் தீவிரமாக எடுத்துக் கொள்ள விரும்புகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். இயக்குநரின் இந்த பதிவு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?