Actors Twitter
சினிமா

விஜய் முதல் யாஷ் வரை : அதிகச் சம்பளம் வாங்கும் 10 தென் இந்திய நடிகர்கள் யார் தெரியுமா?

திரைப்படங்களுக்கான முதுகெலும்பாக இருப்பது நடிகர்கள்தான். தென்னிந்திய சினிமாவில் நடிகர்களின் சம்பள ஒப்பீடு சமீபத்தில் பேச்சு பொருளாகியிருக்கிறது. அவர்களில் யார், யார் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் எனப் பார்க்கலாம்.

NewsSense Editorial Team

தென்னிந்தியத் திரையுலகம் தாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களின் தரத்தால் பாலிவுட்டுக்கு நிகரான இடத்தைக் கைப்பற்றி வருகிறது. கதைக்களம், சண்டைக்காட்சி, எஃப்பெக்ட்ஸ், நடிப்பு - எல்லாமே ரசிக்கும்படி தான் இருக்கிறது. அந்த வகையில் திரைப்படங்களுக்கான பேக்போனாக இருப்பது நடிகர்கள்தான். அவர்களின் சம்பளத்தைப் பற்றிப் பார்ப்போமா… யார், யார் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் எனப் பார்க்கலாம். இது துல்லியமான தகவல்கள் அல்ல... சினிமா செய்தியாளர்கள், சினிமா மேலாளர்கள், பி.ஆர்.ஓ-க்கள் ஆகியோரிடமிருந்து பெற்ற தகவல்களை கொண்டு இது தொகுக்கப்பட்டிருக்கிறது.

Rajinikanth

ரஜினிகாந்த் - 100 கோடி

நம்ம தலைவர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் அமெரிக்கத் திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். அவர் 70களில் இருந்து மக்களை, ரசிகர்களைத் தம் படங்கள் மூலமாக மகிழ்வித்து வருகிறார். ரஜினிகாந்தின் சம்பளம் சுமார் ₹100 கோடி; இதில் படத்தின் லாபமும் அடங்கும்.

Ajithkumar

அஜித்குமார் - 105 கோடி

அஜித் குமார் தொடக்கத்தில் தெலுங்கு படத்தில் துணை நடிகராக ஆரம்பித்துத் தற்போது தமிழில் சூப்பர் ஸ்டாராக மாறியுள்ளார். இவர் 60க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். அடுத்து வெளி வரவிருக்கும் படமான AK 62 படத்துக்கு, அஜித் குமார் ₹100 கோடி கேட்டாராம். ஆனால், தயாரிப்பு நிறுவனம் அஜித்தை முன்னணி நட்சத்திரமாக மாற்றுவதற்காக மேலும் ₹5 கோடிகளைச் சேர்த்து வழங்கியுள்ளது.

Prabhas

பிரபாஸ் - 150 கோடி

இந்தியாவில் அதிகச் சம்பளம் வாங்கும் நடிகர்களில் பிரபாஸும் ஒருவர். சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த ஹீரோ இவர். இவரின் படங்களான பாகுபலி 1, பாகுபலி 2 இந்திய அளவில் பல்வேறு சாதனைகளை முறியடித்தது. அடுத்ததாக வரவிருக்கும் படமான ஆதிபுருஷுக்கு, பிரபாஸ் ₹150 கோடிகளை வாங்கி இருக்கிறார். இது அவரை இந்தியாவில் அதிகச் சம்பளம் வாங்கும் நடிகராக ஆக்கியுள்ளது.

Vijay

விஜய் - 118 கோடி

விரைவில் வரவிருக்கும் தனது 66வது படமான ‘தளபதி 66’ படத்தை வம்சி பைடிப்பள்ளி இயக்கவுள்ளார். இப்படத்திற்காக விஜய் ₹118 கோடியை வாங்கி இருக்கிறார். அதிகச் சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவர் பீஸ்ட் படத்திற்காக சுமார் ₹100 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.

Jr NTR

ஜூனியர் என்டிஆர் - 45 கோடி

ஜூனியர் என்டிஆர் குழந்தை நட்சத்திர நடிகராக, தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கினார். இவர் தெலுங்கு நடிகரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவின் பேரன். அவரது சமீபத்திய திரைப்படம், RRR, பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளை முறியடித்தது. RRR-க்கு அவர் ₹45 கோடி சம்பளம் வாங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Ram charan

ராம் சரண் - 60 கோடி

மற்ற நடிகர்களைப் போலவே, ராம் சரணும் இப்போது குறைந்தத்ய் ₹60 கோடியை சம்பளமாக வாங்குகிறார். அறிக்கைகளின்படி, அவர் தனது வரவிருக்கும் இரண்டு திரைப்படங்களான RC 15 மற்றும் RC 16-க்கு தலா ₹100 கோடிகளை வாங்குகிறார். அவர் தனது சமீபத்திய திரைப்படமான RRR-க்கு ₹45 கோடி பணத்தைச் சம்பளமாக வாங்கியுள்ளார்.

Mahesh Babu

மகேஷ் பாபு - 55 கோடி

மூத்த தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் இளைய மகன் மகேஷ் பாபு. அவர் தனது நடிப்புப் பயணத்தைக் குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கினார். நெனோக்கடைன், அத்தாடு, போக்கிரி, தூக்குடு, ஸ்ரீமந்துடு போன்ற மாபெரும் வெற்றிப்படங்களைக் கொடுத்தார். மகேஷ் பாபு ஒவ்வொரு படத்திற்கும் சுமார் ₹55 கோடி வசூலிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Dhanush

தனுஷ் - 50 கோடி

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பிரபலமானவர் தனுஷ். சேகர் கம்முலாவுடன் நடித்த பான் இந்தியன் படத்தின் மூலம் அதிகச் சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்களின் ஏணியில் தனுஷூம் ஏறி விட்டார். இந்தப் படத்திற்காக தனுஷ் 50 கோடி ரூபாய் வசூலிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

kamal hassan

கமல் ஹாசன் - 25 கோடி

கமல்ஹாசனுக்கு அறிமுகமே தேவையில்லை. அவர் ஒரு நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், நடன இயக்குநர், அரசியல்வாதி மற்றும் பல்துறை வல்லுநர்… தமிழ் சினிமாவுடன் மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் பெங்காலி மொழி படங்களிலும் பணியாற்றியுள்ளார். ஒவ்வொரு படத்திற்கும் கமல்ஹாசன் 25 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Yash

யாஷ் - 30 கோடி

யாஷ் என்கிற பெயரால் அறியப்படுகிறார். ஆனால், இவரது நிஜ பெயர், நவீன் குமார் கவுடா. தனது சமீபத்திய திரைப்படமான KGF: 2 இல் தனது சிறப்பான நடிப்பால் தற்போது தலைப்புச் செய்திகளில் இவர் இருக்கிறார். அறிக்கைகளின்படி, இந்த ராக்கி பாய் தனது கேஜிஎஃப் 2 படத்திற்காக ₹30 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?