Biryani Scenes Canva
சினிமா

தமிழ் சினிமாவும் பிரியாணியும் - ரசிகர்கள் மனதில் நின்ற Biryani சீன்ஸ்

Keerthanaa R

நம் எல்லாருக்கும் நம் முதல் காதலை அறிமுகப்படுத்தியது சினிமா தான்.

நமக்கு பிடித்தமான உணவை, அதை எப்படி ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும் என்பதை நமக்கு எடுத்துக்காட்டியதும் சினிமா தான்.

மாயா பஜாரில் "கல்யாண சமையல் சாதம்" துவங்கி "இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சு சாப்பிட கெடச்சது" வரை, திரைப்படங்கள் உணவின் முக்கியத்துவம் குறித்து பேசியிருக்கும்.

அதிலும், பிரியாணி என்ற சாப்பாட்டின் மீது நமக்கு உருவாகியுள்ள இந்த அளப்பரிய காதலுக்கும் சினிமா தான் காரணம். அப்படி தமிழ் சினிமா கொண்டாடிய சிறந்த பிரியாணி மொமென்ட்ஸ் இது தான்!

ரன்

ரன் படத்தில் வரும் 'காக்கா பிரியாணி' சீன் செம்ம ஃபேமஸ். தன் நண்பனை தேடி சென்னை பெருநகருக்குள் சுற்றித்திரியும் விவேக், உடமைகளை பறிகொடுக்கிறார்.

பசியின் காரணமாக, ஊர்வலத்தில் கூச்சல் போட்டால் 5 ரூபாய் கிடைக்குமென்று, கூட்டத்தோடு கூச்சல் போட்டு பணமும் சம்பாதிக்கிறார்.

அந்த 5 ரூபாய்க்கு சாலையோர தள்ளுவண்டியில் பிரியாணி வாங்கி சாப்பிடும் அவருக்கு, சிறிது நேரத்தில் காகத்தை போல குரல் மாற, அதன் பின்னர் தான் அது காக்கா பிரியாணி என்று தெரியும்.

"காக்கா பிரியாணி துண்ணா காக்கா கொர்லு வராம உன்னிகிருஷ்ண கொரலா வரும்?"

அருள்

சைவம் சாப்பிடும் குடும்பத்தில் பிறந்த கண்மணியும் நீலவேணியும் வீட்டிற்கு தெரியாமல் அசைவ பிரியாணி சாப்பிடுபவர்கள்.

கண்மணி பள்ளியில் படிக்கும்போது ஏமாற்றி தோழிகள் சிக்கனை சாப்பிடவைக்க, ருசி ஒட்டிக்கொண்டதால் துவங்குகிறது இந்த பிரியாணி காதல்.

அம்மா முன்னால் அதை 'பால்கோவா' என்று சொல்லி, திருட்டுத்தனமாக சாப்பிடும்போது எதிர் வீட்டில் இருக்கும் ஹீரோவிடம் மாட்டிக்கொள்கின்றனர்.

"+2 படிக்கும்போது சிக்கன சேனகிழங்கு னு சொல்லி Friends சாப்ட வச்சுட்டாங்க. நாக்குல டேஸ்ட் ஒட்டிக்கிச்சு, அதான் continue பண்றேன்"

பிரியாணி

பிரியாணி சாப்பிட நினைத்தது குற்றமா என்ற அளவுக்கு நம்மை யோசிக்க வைத்துவிடும் இத்திரைப்படம். நண்பர்கள் சுகனுக்கும், பரசுவுக்கும் பிரியாணி சாப்பிடவேண்டும் என்ற cravings வர, தேடித் தேடி அலைகின்றனர் பிரியாணி எங்கு கிடைக்கும் என்று.

கடைசியில் ஒரு இடத்தில் பிரியாணி கிடைத்து சாப்பிட்டுக்கொண்டிருக்கையில், அவ்வழியே வரும் மாயாவை பார்த்துவிட்டு சென்னைக்கு செல்லாமல் பெங்களூரு பக்கம் வண்டி திரும்ப, கதையும் அங்கு தான் திரும்புகிறது.

"பிரியாணி சாப்டாம நாம இன்னிக்கு சென்னை போமாட்டோம்"

கைதி

பிரியாணி மீது நமக்கெல்லாம் இருந்த காதல் ஒரு படி அதிகமானது கைதி திரைப்படத்திற்கு பிறகு தான்.

அப்போது தான் விடுதலையாகி வந்திருக்கும் டில்லியை, காவல் துறை உதவிக்கு அழைக்கிறது. காவலர்களுடன் செல்வதற்கு தயாராகும் வேளையில், பிரியாணியின் வாசம் மூக்கை துளைக்க, ஒரு வாளி முழுக்க பிரியாணியை எடுத்து வந்து ஒற்றை ஆளாய் டில்லி உட்கார்ந்து சாப்பிடும் காட்சி, தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும், நாக்கு ஊற வர்ணிக்கப்படும்!

கேடி என்கிற கருப்புதுரை

நீண்ட நாட்களாக கோமாவில் இருக்கும் கருப்பு துரையை, குடும்பத்தார் கருணை கொலை செய்ய நினைக்கையில், நினைவு திரும்புகிறது அவருக்கு.

வீட்டில் இருந்தால் உயிர் போய்விடும் என்று, வீட்டை விட்டு ஓடிப்போகும் கருப்புக்கு, 8 வயது சிறுவனுடன் நட்பு ஏற்படுகிறது. வாழ்க்கையில் அனுபவிக்காதவற்றை அனுபவித்துவிட வேண்டும் என்று பக்கெட் லிஸ்ட் போடும் இருவருக்குள் மலர்கிறது அன்னியோனியம்.

அப்படித்தான் அந்த சிறுவனுக்கு தெரிகிறது கருப்பு துறைக்கு பிரியாணி என்றால் உயிர் என்று. 12 மணிக்கு தான் மதிய உணவுக்கு பிரியணி கிடைக்கும் என்று கடைக்காரர் சொல்ல, பிரியாணி தயாராகும் வரை அங்கேயே இருக்கிறார் என்றால், எவ்வளவு பிடிக்கும் இவருக்கு பிரியாணி?

இப்படங்களை தவிர, பேட்ட, Bachelor, ஆல் இன் ஆல் அழகு ராஜா, கடைசில பிரியாணி போன்ற படங்களிலும் பிரியாணியின் காட்சியமைப்பு தனி சிறப்பை பெற்றிருக்கும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?