முட்டை முதல் பிரியாணி வரை - Robot சமையல் : ஓர் அடடா தகவல்

இந்த ரோபாட் ஒன்பது வகையான ஸ்கிராம்பிள்ட் எக் (Scrambled Egg) என்றழைக்கப்படும் முட்டை பொடிமாஸ் போன்ற உணவை, மூன்றுவிதமாக கடித்து சுவைத்துப் பார்க்கும் செயல்முறையின் கீழ் ருசி பார்த்தது.
Robot
RobotTwitter
Published on

அறிவியல் தொழில்நுட்பத்தின் பொற்காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எனலாம். 21ஆம் நூற்றாண்டுக்கு முன் மனிதர்களால் மட்டுமே செய்யப்படக்கூடிய பல வேலைகளை இன்று எந்திரங்கள் மற்றும் கணினிகள் அனாயாசமாக செய்து கொண்டிருக்கின்றன.

ஒரு சொல்லை ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழிபெயர்ப்பது, நகை செய்வது, வீட்டை பெருக்கி துடைத்து சுத்தம் செய்வது, ஒரு மனிதனைப் போல கேட்ட கேள்விக்கு பதில் சொல்வது... என செயற்கை நுண்ணறிவும் (Artificial Intelligence) எந்திரங்களும் புகாத துறைகளோ இடங்களோ இல்லை எனலாம்.

அப்படி சமையலுக்கும் ஓர் எந்திரத்தை கண்டுபிடித்து இருக்கிறார்கள் விஞ்ஞானிகள். அந்த எந்திரத்தால் ஒரு உணவை சுவைத்து பார்த்து அதில் உள்ள குறை நிறைகளை கூறமுடியும்.

Robot
RobotTwitter

அதோடு இந்த எந்திரத்தால் உணவு தயாரிக்கப்பட்டு வரும் போதே அதனை சுவை பார்த்துச் சொல்ல முடியும். இது கூட பரவாயில்லை இதற்கும் ஒரு படி மேலே சென்று, மனிதர்கள் தங்கள் வாயில் உணவை சுவைக்கும் போது என்ன மாதிரியான சுவைகளை எல்லாம் உணர்வார்கள் என்பதை அறிந்து இந்த ரோபாட் கூறமுடியும் என செய்திகள் வெளியாகியுள்ளன.

ரஷ்யாவைச் சேர்ந்த கணிதவியலாளர் மற்றும் கணினி விஞ்ஞானியான மார்க் ஒலெனிக் (Mark Oleynik) என்பவர் இந்த ரோபாட் சமையல் கலைஞரை உருவாக்கினார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த ரோபாட்டுக்கு சமைத்துக் கொண்டிருக்கும் போதே உணவை சுவை பார்க்க பயிற்சி அளித்தனர்.

இப்போதைக்கு இந்த எந்திர ரோபாட்டால் பலவிதமான முட்டைகளை சமைக்க இயலும். இந்த ரோபாட்டில் ஆராய்ச்சியாளர்கள் ஒரு சென்சாரைப் பொருத்தியுள்ளனர். அந்த சென்சார் உணவிலுள்ள பல்வேறு வகையான உப்புத்தன்மையை அளவிட உதவும்.

Robot
Pride Month : 'LGBTQ' - கட்டுக்கதைகளும் உண்மைகளும்- எளிய விளக்கம்

இந்த ரோபாட் ஒன்பது வகையான ஸ்கிராம்பிள்ட் எக் (Scrambled Egg) என்றழைக்கப்படும் முட்டை பொடிமாஸ் போன்ற உணவை, மூன்றுவிதமாக கடித்து சுவைத்துப் பார்க்கும் செயல்முறையின் கீழ் ருசி பார்த்தது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த ரோபாட் குறித்து ஃபிரான்டியர் இன் ரோபாடிக்ஸ் அண்ட் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்கிற சஞ்சிகையில் ஓர் ஆய்வறிக்கையை பிரசுரித்துள்ளனர்.

Robot
'காதலுக்கு இது தான் முக்கியம்' Flirting பின்னிருக்கும் அறிவியல் தெரியுமா?

"உண்மையாகவே மனிதர்கள் சுவைப்பது போன்ற ஒரு செயல் முறையையும், ருசி பார்க்கும் ரோபாடிக் அமைப்பையும் உருவாக்க வேண்டும், அதன் விளைவாக மிக அருமையான சுவையான உணவுப் பொருள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று விரும்பினோம்" என பிபிசியிடம் கூறியுள்ளார் முனைவர் ஆர்சென் அப்துலாலி.

இந்த செயல்முறையில், ரோபாட்டால் உணவைக் கடித்துச் சுவைக்கும் போது உணவில் ஏற்படும் மாற்றத்தை உணர முடிந்தது என்றும் கூறியுள்ளார் முனைவர் அப்துலாலி.

Robot
புருவம் இல்லாத மோனலிசா முதல் ஓய்வு இல்லாத எறும்புகள் வரை - இந்த 50 உண்மைகளை அறிவீர்களா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com