மெட்ரோவில் பயணித்த பாலிவுட் நடிகை ஹேமா மாலினி - சூழ்ந்த ரசிகர்கள் | viral video ட்விட்டர்
சினிமா

மெட்ரோவில் பயணித்த பிரபல நடிகை - புகைப்படம் எடுக்க சூழ்ந்த ரசிகர்கள் | viral video

Keerthanaa R

பிரபல பாலிவுட் நடிகை ஹேமா மாலினி மெட்ரோவில் பொதுமக்களுடன் பயணிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சினிமா நட்சத்திரங்கள் அவ்வப்போது பொது போக்குவரத்தில் பயணிப்பதை நாம் பார்த்திருப்போம். சில சமயங்களில் அவர்களது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க இவ்வாறு பயணிப்பார்கள்.

வேலை நிமித்தமாக புறப்படும்போதும், அவர்களது வாகனம் ஏதேனும் பழுதாகி தாமதமானால் பொது போக்குவரத்தை அவர்கள் நாடுவார்கள்.

பாலிவுட் நடிகையும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஹேமா மாலினி, கடந்த செவ்வாய் கிழமையன்று மும்பை மெட்ரோவில் பயணித்தார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இது குறித்து அவர் பகிர்ந்த ட்வீட்டில், தாஹிசார் என்ற இடத்திற்கு காரில் பயணித்ததாகவும், அதற்கு இரண்டு மணி நேரமானதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இரண்டு மணி நேர பயணம் மிகவும் அலுப்பாக இருந்ததால், தாஹிசாரிலிருந்து வீடு திரும்பும்போது மெட்ரோவில் பயணிக்க அவர் முடிவெடுத்தார்.

”இரண்டு மணி நேர பயணம் மிகவும் அலுப்பை அளித்ததால், மெட்ரோவில் பயணிக்க முடிவெடுத்தேன். எவ்வளவு குதூகலமாக இருக்கிறது. மெட்ரோ கட்டுமானத்தின் ஏற்பட்ட சிரமத்திற்கு தற்போது கிடைக்கும் வசதி ஈடாகிவிட்டது” என்றவர், அரை மணி நேரத்தில் தான் செல்லவேண்டிய இடத்திற்கு சென்றடைந்ததாக தெரிவித்தார்.

மெட்ரோவிலிருந்து இறங்கிய பிறகு ஆட்டோவில் பயணித்திருக்கிறார் ஹேமா மாலினி. தான் ஆட்டோவில் பயணிக்கும் வீடியோவையும் அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.

மெட்ரோவில் ஹேமா மாலினி பயணித்தபோது அவரது ரசிகர்கள் அவருடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அவர் ஆட்டோவில் பயணிக்கும் வீடியோவும் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?