Movies Newssense
சினிமா

2022 -ல் இதுவரை வெளியான படங்களில் வெற்றியடைந்த படங்கள் இவைதான்!

Antony Ajay R

லாக்டவுனுக்கு பிறகு நம் சினிமா கண்ணோட்டம் முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. ஓடிடி தளங்களின் வருகையினால் விரிவடைந்திருக்கிறது என்றும் சொல்லலாம். இதனால் நம் ஊரின் டெம்ப்ளேட் சினிமாக்கள் பலமாக அடிவாங்கின. ஆனால் நெட்ஃப்ளிக்ஸ் போன்ற வெளிநாட்டு கம்பனிகளின் டெம்ப்ளேட்டுகளை நோக்கி இந்திய சினிமா பயணித்துக்கொண்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் 2022ம் ஆண்டின் முதல் பாதியை நிறைவு செய்திருக்கும் நாம் பெரும் வெற்றியை அடைந்த படங்களைக் குறித்துக் காணப்போகிறோம். இந்த வரிசையில் தென்னிந்தியப் படங்கள் இடம் பிடித்திருப்பது வியப்புக்குரிய ஒன்று.

KGF 2

KGF Chapter 2

கேஜிஎஃப் முதல் பாகத்தின் பெரு வெற்றியும் புல்லரிப்பும் 2ம் பாகத்திலும் தொடர்ந்தது. இது வரை இந்தியாவில் அதிகம் வசூல் செய்த படங்களின் வரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது கேஜிஎஃப்.

யாஷ் நடித்த இந்தப்படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. கேஜிஎஃப் முதல் பாகத்தைப் போலவே பில்டப் காட்சிகளுக்காக கொஞ்சம் அடிவாங்கினாலும் பெரும்பான்மையான ரசிகர்கள் கேஜிஎஃபை கொண்டாடித்தீர்த்தனர் என்பது தான் உண்மை. இந்த படத்தின் மூலம் சிறந்த கதை சொல்லியாக பிராசாத் நீல் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.

இந்த படம் 1233 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

RRR

RRR

பாகுபலி இயக்குநர் ராஜமௌலியின் திரைப்படம் என்பதனாலேயே அதிக வரவேற்பைப் பெற்றது RRR திரைப்படம். ஜூனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், அலியா பட் உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் பான் இந்தியா கலெக்‌ஷனை குறிவைத்து வெளியான RRR நினைத்ததைக் வெற்றிகரமாக சாதித்தும் காட்டியிருக்கிறது.

1150 கோடி ரூபாய் வசூல் செய்த RRR கேஜிஎஃப் -க்கு அடுத்தபடியாக அதிக வசூல் செய்த 3 வது இந்தியப்படமாக இருக்கிறது.

Vikram

Vikram

கமல்ஹாசனுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு ரிலீசான ஹிட் படம் விக்ரம். படக்குழுவினரே நம்ப முடியாத வெற்றியைப் பெற்றது. இதன் வசூல் வேட்டை தான் இந்திய சினிமாவின் பந்தையத்தில் தமிழ் சினிமாவையும் இடம் பெற வைத்தது. இந்த ஆண்டு வெளியான பல முன்னணி நடிகர்களின் படங்கள் தோல்யடைய விக்ரமின் வெற்றி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

படம் வெளியாகி இரண்டு வாரங்களுக்குப் பிறகும் சிறப்புக் காட்சிகளுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை 350 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது விக்ரம்.

The Kashmir Files

The Kashmir Files

இந்த ஆண்டு தென்னிந்திய படங்களுக்கானது மட்டுமல்ல எனப் போட்டிக்கு வந்தது காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம். இந்த படம் அதன் ஒரு சார்புத் தன்மைக்காக விமர்சிக்கப்பட்டு சர்ச்சைகள் ஏற்பட்டாலும் 340.16 கோடி ரூபாய் வசூல் செய்தது.

Bhool Bhulaiyaa 2

Bhool Bhulaiyaa 2

இந்த வரிசையின் கடைசியாகவும் 2வது பாலிவுட் படமாகவும் இருக்கிறது பூல் புலையா 2 (Bhool Bhulaiyaa 2) . கார்திக் ஆர்யன், கியாரா அத்வானி நடித்த இந்த படம் பாலிவுட்டில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

252.30 கோடி ரூபாய் வசூல் செய்து இந்த ஆண்டின் பெரிய வசூல்களின் ஒன்றாக இடம் பிடித்திருக்கிறது பூல் புலையா 2.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?