Suhasini Maniratnam Twitter
சினிமா

Suhasini : ’இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள்’ - நடிகை சுஹாசினி பேச்சு

இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் என்றும் அவர்களுடன் பேசுவதற்காக நாம் இந்தியை கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் இயக்குநர் மணிரத்தினத்தின் மனைவி சுஹாசினி கூறியுள்ளார்.

Priyadharshini R

இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் என்றும் அவர்களுடன் பேசுவதற்காக நாம் இந்தியை கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் இயக்குநர் மணிரத்தினத்தின் மனைவி சுஹாசினி கூறியுள்ளார்.

நாட்டின் இணைப்பு மொழியாக இந்தி அங்கீகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். இந்த கருத்திற்குச் சிலர் ஆதரவையும், எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். பல மாநிலங்களில் அமித்ஷாவின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் தற்போது திரைத்துறையிலும் மோதலாக வெடித்து வருகிறது.

சமீபத்தில் திரைப்பட விழா ஒன்றில் பேசிய சுதீப்“இனி ஒரு போதும் இந்தி நம் தேசிய மொழி இல்லை” எனப் பேசியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்தி நமது தேசிய மொழி இல்லையென்றால் உங்கள் தாய்மொழி படங்களை இந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள்? இனிமேல் நமது தாய்மொழியாகத் தேசிய மொழியாக இந்தி இருக்கும்"எனப் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் ட்விட் செய்தார்.

Kangana Ranaut

இதற்குப் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், அஜய் தேவ்கன் இந்தி மொழியைத் தேசிய மொழி என்று தெரிவித்த கருத்தில் எந்தவித தவறும் இல்லை என்றார். இந்நிலையில் இயக்குநர் மணிரத்தினத்தின் மனைவியும் நடிகையுமான சுஹாசினி இந்தி குறித்து கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இந்தி நல்ல மொழி; இந்தி பேசுபவர்கள் தமிழ் பேசுவோரைப் போன்றே நல்லவர்கள் என்று நடிகை சுஹாசினி கூறியுள்ளார். எல்லோரும் அனைத்து மொழிகளையும் சமமாகக் கருத வேண்டும்; இந்தியைக் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இவரின் இந்த கருத்தைப் பலரும் பல வகையில் விமர்சித்து வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?