Pathan: "யார் அந்த ஷாருக் கான்?" கேள்வி எழுப்பிய அசாம் முதலமைச்சர் - என்ன நடந்தது? ட்விட்டர்
சினிமா

Pathaan: "யார் அந்த ஷாருக் கான்?" கேள்வி எழுப்பிய அசாம் முதலமைச்சர் - என்ன நடந்தது?

Keerthanaa R

ஷாருக் கான் நடிப்பில் வெளியாகவிருக்கும் பதான் திரைப்பட சர்ச்சைக் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, "யாரு ஷாருக் கான்? எனக்கு அவரைப் பற்றியோ அல்லது பதான் படம் குறித்தோ எதுவும் தெரியாது" என்று பத்திரிகையாளர்களிடம் காட்டமாக பதிலளித்தார் அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா.

ஷாருக் கான், தீபிகா படுக்கோனே நடிக்கும் படம் பதான். சமீபத்தில் இந்த படத்தின் "பேஷரம் ரங்" என்ற பாடல் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. முக்கியமாக தீபிகா படுக்கோன் அணிந்திருந்த காவி நிற ஆடை!

Pathaan: காவி பிகினியில் நடிகை; சர்ச்சையை கிளப்பிய ஷாருக்கான் பட பாடல்- வலுக்கும்எதிர்ப்பு

பலரும் இந்த பாடல் குறிப்பிட்ட மதத்தினை அவமதிப்பதாக இருக்கிறது என்று பெரும் எதிர்ப்பு கிளம்பியது. நடிகர் ஷாருக் கானை உயிருடன் எரித்துவிடுவேன் என்று தபஸ்வி சாவ்னியின் மஹந்த் பரமஹன்ஸ் ஆச்சார்யா காட்டம் தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த படத்திற்கு தடை விதிக்கவேண்டும் எனவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த வெள்ளிக் கிழமையன்று கவுஹாத்தி நகரில் பதான் திரைப்படம் வெளியாகவிருக்கும் திரையரங்கில் ஒட்டப்பட்டிருந்த படத்தின் போஸ்டர்களை கிழித்து, எரித்து போராட்டம் நடத்தியுள்ளனர் பஜ்ரங்க் தல் அமைப்பை சேர்ந்தவர்கள்.

இந்த போராட்டங்கள் குறித்து அசாம் முதலமைச்சர் ஹிம்ந்தா பிஸ்வா சர்மாவிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன.

Shahrukh Khan

அதற்கு பதலளித்தவர், "யார் ஷாருக் கான்? எனக்கு அவரை தெரியாது, பதான் படம் குறித்தும் எதுவும் தெரியாது" என்று கூறினார்.

"இந்த சர்ச்சைக் குறித்து பாலிவுட்டின் பலரிடம் இருந்து எனக்கு அழைப்புகள் வந்தன. ஆனால் சம்பந்தப்பட்ட ஷாருக் கானிடம் இருந்து எந்த அழைப்பும் எனக்கு வரவில்லை. அவர் என்னை தொடர்புகொண்டால் நான் நிச்சயம் இந்த பிரச்னைக்கான தீர்வை அளிப்பேன். சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும், இது சம்பந்தமாக வழக்கும் பதியப்பட்டுள்ளது" என்றார்.

அப்போது பத்திரிகையாளர்கள் ஷாருக் கான் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்று எடுத்துரைத்தபோது, மக்கள் அசாம் படங்களை பற்றி கவலைப்படவேண்டும், பாலிவுட்டை பற்றி அல்ல என்றார்.

இந்நிலையில், நடிகர் ஷாருக் கான் தன்னை தொடர்புகொண்டதாகவும், பதான் திரைப்பட வெளியீடு குறித்து அவர்கள் உரையாடியதாகவும் அவர் தெரிவித்தார்.

"இன்று காலை 2 மணியளவில் என்னை ஷாருக் கான் தொடர்புகொண்டார். திரையரங்க சர்ச்சைக் குறித்தும், படம் வெளியீடு குறித்தும் அவர் என்னிடம் பேசினார். மாநில அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்றும், சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் எனவும் நான் அவருக்கு உறுதியளித்துள்ளேன்" என்று தன் ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார்.

ஷாருக் கானின் பதான் திரைப்படம் வரும் ஜனவரி 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?