பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் விக்ரம்.
இப்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் அவர் மீது எதிர்பார்ப்பு மிகுந்திருக்கிறது.
நாளை ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது பொன்னியின் செல்வன் திரைப்படம். அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அவரது தங்கலான் திரைப்படமும் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கலான் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சில செய்திகளில் தங்கலான் என்ற பெயர் வரலாற்று அடையாளத்தை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
'தங்கலான்' என்ற சொல் ஒரு குறிப்பிட்ட இனத்தின் தலைவன் மற்றும் பாதுகாவலரைக் குறிக்கும் என்று நம்பப்படுகிறது, மக்களைப் பாதுகாக்க போர் வீரனாக சேவையாற்றியவர்.
பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட 1881 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் தரவுகளிலிருந்து இந்த பெயர் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதே பெயரில் ஒரு இனக் குழுவும் இருந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.
படப்பிடிப்பின் இறுதிப்பணிகள் சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்று வருகிறது. விக்ரமுடன் பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து ஆகியோர் நடிக்கின்றனர்.
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கி வருகிறார். ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust