ரஜினிகாந்த் டிவிட்டர்
சினிமா

Ponniyin Selvan: “பெரிய பழுவேட்டரையர் பாத்திரத்தை நான் கேட்டேன்” - ஆடியோ லாஞ்சில் ரஜினி

Keerthanaa R

நேற்று நடந்த பொன்னியின் செல்வன் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் பங்கேற்றனர். ஒரே மேடையில் இருவரும் பொன்னியின் செல்வன் படம் குறித்து, இயக்குநர் மணிரத்னம் குறித்தும் பேசினர்.

முதலில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், கமலுக்கு விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர், தான் தளபதி படத்தில் மணிரத்னத்துடன் வேலை பார்த்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் படம் மணிரத்னம், மற்றும் தமிழ் சினிமாவின் கனவு எனக் கூறிய அவர், தானும் இப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தை கேட்டதாக பேசினார். ஆனால் இயக்குநர் அதற்கு ஒத்துக்கொள்ளவே இல்லை என மேடையில் நகைச்சுவையாக ரஜினி குறிப்பிட்டார்.

ரஜினிகாந்த் இயக்குநர் மணிரத்னம் இடம், கதையின் முக்கிய கதாபாத்திரமான பெரிய பழுவேட்டரையர் பாத்திரத்தை ரஜினி கேட்டதாகவும், அதற்கு இயக்குநர் மறுத்ததாக அவர் கூறினார்.

“பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்த நா பண்ணவா னு மணிரத்னத்திடம் கேட்டேன். அவர் ஒத்துக்கவே இல்லை!” என்றார் ரஜினி. இந்த பாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நந்தினியின் கதாபத்திரம் தான் பொன்னியின் செல்வன் கதை என்றும், அதனை பொன்னியின் செல்வி என்றால் சரியாக இருக்கும் என்றார் ரஜினி. "நந்தியின் Inspiration தான் படையப்ப படத்தில் தோன்றிய நீலாம்பரி கதாபாத்திரம்" என்றார்.

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. தமிழில், கமல் ஹாசனின் பின்னணி குரலில் டிரெய்லர் வெளியிடப்பட்டது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?