Lokesh Kanagaraj Twitter
சினிமா

Lokesh Kanagaraj:"என் மனைவி வேலைக்கு சென்றதால் தான் சினிமாவில் ஜெயித்தேன்" லோகேஷ் உருக்கம்

முதல் படமான மாநகரம் வெற்றி பெற்ற போதிலும் இரண்டாவது படம் கிடைக்கும் வரை தனது மனைவியை வேலைக்கு அனுப்பியதாகவும் மனைவியின் சப்போர்ட் இருந்ததால் தான் என்னால் சினிமாவில் ஜெயிக்க முடிந்தது என்றும் கூறியுள்ளார்.

Priyadharshini R

மிகக் குறுகிய காலத்தில் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமா மட்டுமின்றி ஒட்டுமொத்த தென்னகத்திலும் மோஸ்ட் வான்டட் இயக்குநராக இடம் பிடித்துள்ளார்.

முன்னாள் வங்கி ஊழியரான இவர், சினிமா மீது மிகுந்த ஈடுபாடு கொண்டு, உதவி இயக்குநராகப் பணிபுரியாமல் 'மாநகரம்' படத்தில் அறிமுகமாகி விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்டார்.

லோகேஷ் தனது அடுத்த படமான 'கைதி' திரைக்கு வர இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது, மேலும் கார்த்தி நடித்த படம் அவருக்கு விமர்சன ரீதியான பாராட்டை மட்டுமல்ல, மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியையும் கொண்டு வந்தது.

விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரை வைத்து இவர் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படம் கோவிட் 19 தொற்றுநோய்க்கு மத்தியிலும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

அதன் பின் கமலை வைத்து விக்ரம் படம் இயக்கி மாபெரும் ஹிட் கொடுத்தார். தற்போது அவர் விஜய் நடித்துவரும் ’லியோ’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இன்று கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் லோகேஷ் கனகராஜ், ஆரம்பத்தில் சினிமாவில் நுழைவதற்கு மிகவும் சிரமப்பட்டிருக்கிறார்.

சினிமா ஆசை காரணமாக வேலையை விட்டுவிட்ட லோகேஷ் கனகராஜ் படம் இயக்க தொடங்கிவிட்டார்.

முதல் படமான மாநகரம் வெற்றி பெற்ற போதிலும் இரண்டாவது படம் கிடைக்கும் வரை தனது மனைவியை வேலைக்கு அனுப்பியதாகவும் மனைவியின் சப்போர்ட் இருந்ததால் தான் என்னால் சினிமாவில் ஜெயிக்க முடிந்தது என்றும் கூறியுள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா என்பவரை லோகேஷ் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அத்விகா லோகேஷ் மற்றும் ஆருத்ரா லோகேஷ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சினிமாவுக்கு வரும் முன் லோகேஷ் மற்றும் அவரது மனைவி இருவரும் சேர்ந்து வங்கியில் வேலை செய்துள்ளனர். சினிமாவிற்குள் லோகேஷ் நுழைய, அவர் மனைவி தொடர்ந்து வேலைக்கு சென்று வந்திருக்கிறார்.

குழந்தை ஏழு மாதமாக இருக்கும்போது என்னுடைய மனைவி வங்கியில் பணியில் சேர்ந்து எங்கள் குடும்பத்திற்கு சப்போர்ட்டாக இருந்தார் என்றும் நான் இரண்டாவது படம் கையெழுத்தான பின்னர் தான் அவரை வேலையை விட்டுவிடச் சொன்னேன் என்றும் இந்த புரிதல் தான் என்னை சினிமாவில் நிலை நிறுத்தியது என்றும் பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?